♥பெண்களே இதை படியுங்கள் உங்கள் கணவரை புரிந்து நடவுங்கள்... திருமணம் ஆன புதுசுல உங்க கணவர் சமயம் கிடைக்கும் போதெல்லாம் உங்களை கட்டி அனைத்திருப்பார்... முத்தம் கொடுத்திருப்பப்பார்... சமையலறைக்கு அடிக்கடி ஓடி வந்திருப்பப்பார்.... உங்கள் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசுகள் கொடுத்திருப்பப்பார்.... நள்ளிரவில் வாழ்த்தி இருப்பார்..... திருமணநாளுக்கு புடவையோ நகையோ பரிசளித்திருப்பார்....
♥ஆனால்.. வருடங்கள் கூட கூட இதெல்லாம் குறைந்திருக்கும்.... உங்களை கட்டி அணைப்பதுவும், முத்தம் கொடுப்பதுவும் வெகுவாக குறைந்து போயிருக்கும்.. சமயங்களில் அறவே நின்றுகூட போயிருக்கும்.... சமையலறை பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டார்... பிறந்தநாளை மறந்துகூட போயிருப்பார்... எல்லா நாளையும் போல திருமண நாளையும் ஒரு சாதாரண நாளாக கடந்துகொண்டிருப்பார்..
♥இதுதான் எதார்த்தம்..... ஆரம்பத்தில் ஓடி வந்து ஓடி வந்து கட்டிப்பிடித்தீர்களே... இப்போது நானாக அருகில் வந்தால் கூட கசகசன்னு இருக்குன்னு புரண்டு படுக்கிறீங்களே.... என்னோட பிறந்தநாள் எப்போன்னு கூட தெரியலையே.... என்பது போன்ற பல ஆரம்பகால விஷயங்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு அவரை குடைய தொடங்குவீர்கள்... உங்கள் கோபம் எரிச்சலாக வெளிப்படும்..... இந்த எரிச்சல் அவரை மேலும் மேலும் உங்களிடம் இருந்து விலக்குமே தவிர.... எந்த காலத்திலும் அந்த இன்ப நினைவுகளை மீண்டும் நிகழ்வில் கொண்டு வரவே வராது....
♥ஒரு குடும்பத்தலைவனின் மனசு என்பது ஒரு இளம் மூங்கில் குருத்து போல..... ஆரம்ப காலங்களில் நீங்கள் அந்த குருத்துக்கு சப்போர்ட்டாக நிற்பீர்கள் என்று அந்த குருத்து ஆனந்திக்கும்.... ஆனால்..... அவரது சகோதரிகளுடன் முரண்பட்டு, சகோதரர்களுடன் முரண்பாடு, அப்பா-அம்மாவுடன் முரண்பாடு , பொருளாதார தேவைகள் என தொடர்ச்சியாக நீங்கள் ஒவ்வொரு கல்லாக கட்டி கட்டி அந்த குருத்தில் கட்டும்போது,..... அந்த குருத்து வளைந்து தரையை தொட்டிருக்கும்.....
♥உங்களையும் விட்டுக்கொடுக்க முடியாமல்.... உடன்பிறந்த, பெற்றோர்களையும் விட்டுக்கொடுக்க முடியாமல் , பொருளாதார தேவைகளை சமாளிக்கவும் திண்டாடி தன் சுயம் இழந்திருப்பார் அவர்.... இந்த சுய இழப்பு என்பது, இதெற்கெல்லாம் காரணம் என அவர் நினைக்கும் உங்கள் மீது எரிச்சலாய் திரும்பும்....
♥துரதிஷ்ட வசமாக அந்த எரிச்சலையும் கூட நேரடியாக காட்ட முடியாமல் தவித்து, உங்களை தவிர்ப்பார்....
♥நீங்களும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதை போல... அவர் உங்களிடம் பேசும் இரண்டொரு நிமிடங்களில் கூட குறைகளையும், பிரச்சினைகளையும் மட்டுமே பேசுவீர்கள்....
♥மாறாக..... கிடைக்கும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் உங்கள் பழைய ஆனந்த வாழ்வை நினைவுகூர்ந்து மட்டும் பேசுங்கள்.... "நாம அங்க போனோமே.... அந்த ஹோட்டல்ல சாப்பிட்டோமே.... நம்ம பையன் பிறந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கா... நீங்க கொண்டாடி தீர்த்தீங்களே..... நான் கன்சீவ் ஆனதை சொன்னன்னிக்கு நீங்க ரெக்கை கட்டி பறந்தீங்களே..... நாம வீட்டு வேலை ஆரம்பிக்கும்போது எப்படித்தான் சமாளிக்க போறீங்களோன்னு பயந்தேன்.... நல்லவேளை.. தெய்வம் கூட நின்னுச்சு.. நீங்க சாதிச்சுட்டீங்க.... அப்படி இப்படினு உங்கள் ஞாபக அடுக்கில் நிறைந்திருக்கும் ஏதாவது நல்ல நினைவுகளை மட்டும் பேசுங்கள்.....
♥ முக்கியமாக.... நாம மொத மொதல்ல என்ன படம் பார்க்க போனோம்?? என் கல்யாண பட்டுப்புடவை என்ன கலர் என்பது மாதிரியான கேள்விக்கணைகளை அறவே தவிர்த்து.... அவைகளை நீங்களே சொல்லி நினைவுகூருங்கள்...
உலகத்தமிழ் மங்கையர் மலர்
♥ உங்களோடு அவர் பேசத்தொடங்குவார்.... பிறகு உங்கள் எதிர்பார்ப்புகளை சொல்லுங்கள்.... நாம ஹனிமூன் போனோமே... அதே இடத்துக்கு நம்ம பிள்ளைகளை கூட்டிட்டு போகணும்ங்க.... உங்க அக்கா நம்ம வீட்ல வந்து சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு.... இந்த வாரம் வரச்சொல்லலாமா.... எங்க அம்மா கேட்டாங்க.... ஒரு நாளைக்கு கூட்டிட்டு வான்னு சொன்னாங்க.... நான்தான் "அவர் பாவம்மா.. ஒரு ஆள் எத்தனை இடத்துக்குத்தான் கிடந்து அலைவார்"ன்னு சொல்லி சமாளிச்சுட்டேன்.... அப்படி இப்படின்னு உங்கள் ஆசைகளை, எதிர்பார்ப்புகளை நயமாக வெளிப்படுத்திடுங்கள்...
♥ஏதாவது பணப்பிரச்சினை என்றால் அதை பிரமாண்டமாய் விவரிக்காமல் மிகச்சாதாரண விஷயமாய் சொல்லுங்கள்... கவலைப்படாதீங்க.. சமாளிப்போம்.. என்று பன்மையில்.. நானும் உங்களுடன் இருக்கிறேன் என்று உணர்த்துங்கள்...
♥அவ்வளவுதான்.... உங்கள் திருமணமான புதிதில் இருந்த வசந்தம் மீட்டெடுக்கப்படும்... ஐம்பதிலும் ஆசை வரும்... இளமை ஊஞ்சலாடும்....
0 Comments
Thank you