♥ஆண்களே... உங்களிடம் எங்கள் எதிர்பார்ப்புக்கள் ஏராளம்!
♥பெண்களின் வளர்ச்சிக்கு ஆண்கள் ஒரு போதும் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. ஒரு தந்தையாக, கணவராக, காதலனாக பெண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் அறிவுரை கூறலாம். ஆனால், அவர்களின் முயற்சியை நீங்கள் பாராட்ட வேண்டும். இதெல்லாம் பெண்களுக்கு எதுக்கு .. எனகூறி முட்டுக்கட்டை போடாதீர்கள்.
♥ஆண்கள் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். பெண் தானே என்று சாதாரணமாக நினைத்து அவர்களை உதாசினம் செய்யக் கூடாது.
அவர்களும் மனசுஉள்ளவர்கள் என அவர்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும்.
♥ஒரு சில ஆண்கள் பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்; அவர்களால் தான் பெண்களின் மனநிலையை முழுமையாக உணர முடிகிறது. ஆனால் இப்படியான ஆண்கள் அதிஷ்டக்கார பெண்களுக்கு அமைகிறது....
♥போகும் இடமெல்லாம் எடை போட்டுப் பார்க்க பொருளல்ல பெண்' ஆம், முதலில் பெண்களின் வலியை ஆண்கள் உணர வேண்டும். தானும் ஒரு பெண்ணாக இருந்தால் இப்படித் தானே இருக்கும் என்று பெண்கள் இடத்தில் இருந்து ஆண்கள் யோசிக்க வேண்டும்.
♥ஒரு பெண் சிரிப்பதை கூட வித்தியாசமாக பார்த்து அதற்கு தவறான அர்த்தம் கண்டு பிடிக்கும் ஆண்கள் கொஞ்சம் திருந்த வேண்டும். மனம் விட்டுச்சிரிக்ககூட முடியாத பிறப்பா பெண்?...
♥ஒரு பெண் ஏதாவது ஒரு சாதனை செய்தால் கூட அதை பாராட்ட தயங்கும் ஆண்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் இதே சமூகத்தில் ஒரு விதவைப் பெண் பூவும், பொட்டும் வைத்துக் கொண்டால் அதை மோசமாக விமர்சிக்கும் பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால், இந்த விஷயத்தை ஒரு சில ஆண்கள் முற்போக்கு சிந்தனையுடன் பார்ப்பது ஆறுதலான விஷயம்.
♥ஒரு.பெண் நட்பாக சிரித்தால் உடனே அவளை உடல்ரீதியாக நெருங்கலாம் என்ற கேடுகெட்ட வக்கிர சிந்தனையை தூக்கி வீசுங்கள்....
0 Comments
Thank you