♥தான் நன்றாக நடந்துக் கொண்டாலும் தன் மனைவி திட்டிக் கொண்டே இருக்கிறாளே என்று ரொம்ப நாளாக எனது நண்பருக்கு கவலை. சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஒரு ஞானியை பார்க்க சென்றான். அவரை பார்த்து ஆதங்கத்தைச் சொன்னார். அதைக் கேட்டவாறே ஞானியும் தன் கையில் இருந்த கம்பை எடுத்து அருகில் அமைதியாக உட்கார்ந்திருந்த குரங்கை ஒரு அடி அடித்தார்.
♥இவ்வாறு அடிக்கடி கம்பை எடுத்து தன் அருகில் சும்மா உட்கார்ந்திருந்த குரங்கை திரும்ப திரும்ப அடித்தார்.
இதை பார்த்து பாவப்பட்ட அவன் “இந்த குரங்கு அதுபாட்டுக்கு அமைதியாகத் தானே இருக்கிறது. நீங்கள் ஏன் அதை அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்” என்று கேட்டுவிட்டான்.
♥அதற்கு அந்த ஞானி “அப்படியா, கொஞ்சம் இரு” என கம்பை ஓரமாக வைத்து விட்டு கையை கட்டிக் கொண்டு அமர்ந்தார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த குரங்கு மெதுவாக நகர்ந்து, குருவின் மடியில் காலை வைத்து ஏறி இறங்கியது.முன்னாடி தட்டில் வைத்திருந்த வாழைப்பழத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு பூவை அங்கும் இங்கும் பிய்த்து போட்டது. தட்டை தலைகீழாக கவிழ்த்தியது.
♥ஓரமாக வைத்த கம்பை மறுபடியும் ஞானி எடுத்து அந்த குரங்கை பழையபடி ஒரு போடுபோட்டார். அது அமைதியாக பழைய இடத்தில் உட்கார்ந்து கொண்டது.
♥இப்போது சொன்னார், “உன் கேள்விக்கு பதில் தெரிந்துவிட்டதா?
ஒவ்வொரு மனைவிக்கும் தனது கணவன் ஒரு குரங்கு மாதிரி.
♥அவள் திட்டாமலிருந்தால் கணவன்மார்கள் தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள், தப்பு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான் எல்லா மனைவிகளும் சும்மாவாயினும் கணவன்மார்களை திட்டிக்கொண்டே இருக்கிறார்கள், என்றார்.
♥அவனுக்கு வாழ்க்கைத் தத்துவம் புரிய ஆரம்பித்தது ஆம் கணவன் மனைவி உறவு அற்புதமானது. ஒருவருக்கு ஒருவர் அடிக்கடி பேசிக்கொண்டே இருங்கள். சண்டை இருந்தால்தான் சமாதானமும் புரிதலும் வரும்.
♥நமது பிள்ளைகளும் பெற்றோர்களும் கூட நம்மை விட்டு ஒரு காலத்தில் பிரிந்து போவார்கள். ஆனால் கணவன், மனைவி உறவு எப்போதும் மகிழ்ச்சியாக, பிரியாமல் ரயில் தண்டவாளம் போல் இணைந்தே இருக்கும். சின்னச் சின்ன ஊடல்களும் கூடல்களும் உங்கள் இல்லற வாழ்க்கையை இன்னும் இன்பமாக்கும்
0 Comments
Thank you