#வக்கிரமில்லாமல் #வாழ்ந்த #தலைமுறை #ஆண்கள்
அடிவயிறு நொந்துவிடும் என்று
அந்த மூன்று நாட்களும்
தொட்டியில் குடங்களில்
தண்ணீர் நிறைத்து வைக்கும் அப்பாக்கள்
கிணற்றடியில் குளிப்பதற்கு
கிடுகுவைத்து வேலியை உயர்த்தும் அண்ணன்மார்.
அயர்ந்து தூங்கும் போது சற்று
ஆடை விலகியிருந்தால்
போர்வையை போர்த்திவிட்டு செல்லும் தம்பிகள்.
பள்ளிக்கு நேரம் சென்றால்
பத்து வயது பையனிடம் நம்பி
எட்டு வயது பிள்ளையை
ஏற்றி விடும் அம்மாக்கள்.
பிள்ளை பெற்ற காலங்களில் மனைவிக்கு வெந்நீர் வைத்தும் வெந்தயம் கலந்து விறாத்து கோழி சமைத்தும் பார்த்த
ஆருயிர் கணவன்மார்.
கலியாணம் கச்சேரி திருவிழாவிற்கு
ஓர் வீட்டில் கூடி ஒரு பாயில்
ஒன்றாய் படுத்துறங்கிய காலம்.
கலியாண வீட்டுக்கு ஒருமாதம் முதலே
பலகாரச்சூட்டுக்கு
பாய் படுக்கை பொட்டணியுடன்
படையெடுத்தோம்.
கூட்டிச்செல்ல இயலாத இடங்களுக்கு போகையில்
அயல் வீட்டில்
அஞ்சாறு ஆண்பிள்ளை இருந்தும் பயப்படாமல் ஒப்படைத்து
விட்டு செல்லும் அம்மா.
வகுப்புக்கள் முடிந்து
வரும்போது இரவானால்
வாசல் வரை வந்து
விட்டுபோகும் ஆண்_நட்புகள்
ஆண் பெண் என்ற பேதமில்லாமல்
அடித்துப்பிடித்து விளையாடினோம்
மாமா மச்சான்
மடிமீதிருந்தும் செல்லம் பொழிந்தோம் துளி கூட விரசம் இன்றி...
0 Comments
Thank you