HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ரசவடை - கன்னியாகுமரி ஸ்பெஷல்

ரசவடை - கன்னியாகுமரி ஸ்பெஷல்

உறுகாய்க்கு பொறவு சும்மா பேர கேட்ட ஒடனே நமக்கு நாக்குல எச்சி ஊறும் சாப்பாடு ஐட்டம் ரசவடைதான். குமரியான் வாழ்வியலில் நீங்காம இடம்பிடிச்சிருக்கும் ஒரு எளிமையான ருசியான காப்பி கடை உணவு......

பருப்புவடையை சுடு இரசத்தில் இட்டு அது கொவுர கொவுர ஒரு குழி சாஸர்ல ரசம் மணக்க மணக்க ஒரு ஸ்பூனுயும் போட்டு நம்ம டேபிளுக்கு வரும் ரசவடையின் மணமும் ருசியும் அருமையோ அருமை..........

சின்னபுள்ளயா இருக்கும்போது அப்பாரு ஊர்ல இருந்தா எப்பவாச்சும் அவருகூட  போவோம். காலையோ உச்சையோ இராத்திரியோ எப்ப போனாலும் அவருக்கு ஒரு சாய குடிச்சேயாவனும் எனக்கு அவரு சாய குடிச்சியாரோ இல்லயோ ஆனா சாய கடைக்கு போயே ஆவனும் அப்பதான் நமக்கு ரசவட நிச்சயம். இப்படித்தான் ரசவடை நம்ம வாழ்க்கைல வந்திச்சி...........

பள்ளியடத்துல படிச்சிட்டிருந்தப்போ  ஒரு காபிக்கடை உண்டு இன்னைக்கும் இருக்கும்னு நினைக்கேன். பக்கத்துல எத்தன கட வந்தாலும் இன்னைக்கும் அதுக்கு சைசு எட்டுக்கு எட்டுதான் அங்க அன்னைக்கி காலத்துல ரசவடை ஒன் ஆப் தி பேமஸ் ஐட்டம்.......


மிகசமீபத்தில் சந்தைல தம்பி ஒருத்தனை சந்திச்சு பேசிகிட்டிருந்தேன் ரசவடை சாப்ட போவோம்னு  ஒரு சாய்ப்பு எறக்குன அக்கா கடைக்கு கூட்டிட்டு போனான்.கொஞ்ச காலத்துல கடைசியா சாப்ட்ட தேவாமிர்தம் அதுதான்.........

நாரோயில்ல அந்த காலத்துலயே காஸ்ட்லியான ரசவட கடையெல்லாம் இருந்திச்சி ஆனா என்ன கடதான் மணக்குமே தவிர ரசமும் மணக்காது வடயும் மணக்காது..........

நான் சாப்ட்டதுல்லயே அதி சுவை மிக்க ரசவடனா திக்கனங்கோட்டு பக்கத்துல
ஒரு பாட்டியும் தாத்தாவும் நடத்துன ஒரு கடதான் பதிமூனு வருசம் முன்னாடி நானும் என் முதலாளியும் அதுக்குன்னே காலத்தயே போவோம் இன்னைக்கு அந்த கட இருக்கானு தெரியல..........

இந்த ருசி எல்லாத்தயும் விட்டு சமூக நீதி பார்வைல பாத்தா ரசவட ஒரு சமத்துவ உணவு. காலைக்கும் உச்சைக்கும் இராத்திரிக்கும் செட் ஆவுற உணவு தனியாவும் சாப்பிடலாம் சோறு இட்லி தோசை இப்டி மற்ற உணவுகளுக்கூட கலப்பு பன்னியும் தின்னலாம். இதுல ரகசியம் என்னான வடை இன்று போட்டதா நேத்து போட்டதா இல்லனா ஒரு வாரத்துக்கு முன்னாடி போட்டதான கடகாரனுக்கு மட்டும் தான் தெரியும்..........

Post a Comment

0 Comments