ஒரு பெண் பிகாஸோவை அணுகி தன்னுடைய படத்தை வரைந்து கொடுக்கச் சொன்னாள். பிகாஸோவும் வரைந்து கொடுத்தார். அவளுக்கு மிகவும் திருப்தி. அவள் இது மிகவும் அழகாக இருக்கிறது, ஆனால் ஒரு விஷயம். நீங்கள் என் கழுத்தை சுற்றி டைமண்ட் நெக்லஸ், விரலில் மிகப்பெரிய வைர மோதிரம், கைகளில் டைமண்ட் பிரஸ்லெட் ஆகியவற்றை வரைய மறந்து விட்டீர்கள். என்றாள்.
பிகாஸோ, ஆனால் நீங்கள் போட்டிருக்கவில்லையே என்று கேட்டார்.
அவள், அது விஷயமல்ல, எனக்கு கேன்சர், இன்னும் ஆறு மாதத்தில் நான் இறந்து விடுவேன். நான் இறந்தவுடன் என் கணவர் மறுமணம் செய்து கொள்வார் என்று எனக்குத் தெரியும். அவர், நீ இல்லாமல் என்னால் ஒரு நொடிகூட வாழ முடியாது என்று கூறினாலும்கூட அவர் நான் இறப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். பெண் இல்லாமல் அவரால் ஒரு கணம்கூட வாழ முடியாது என்று எனக்குத் தெரியும், ஆகவே உடனடியாக அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என்றாள்.
பிகாஸோ, நீ இப்போது கூறியதற்க்கும் டைமண்ட் நகைக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை என்றார்.
அவள், உங்களுக்கு பெண் மனது புரியாது. நான் இறந்தபின் எனது கணவர் மணம் செய்து கொள்ளப் போகும் பெண் என்னுடைய சித்திரத்தை பார்ப்பாள். பின் அவள் அவரை எங்கே அந்த வைரங்கள் என்று வதைப்பாள். நான் இறந்தபின்னும் கூட என்னால் அவரை விட்டு இருக்க முடியாது. அவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். என்றாள்.
மக்கள் வாழ்வதை மறந்து விடுகிறார்கள். யாருக்கு நேரமிருக்கிறது. எல்லோரும் மற்றவரை பழக்கப்படுத்துவதிலேயே இருக்கிறார்கள். ஆனால் அதிலும் யாரும் இன்னும் திருப்தி அடைந்த மாதிரியே தெரியவில்லை. 😄
0 Comments
Thank you