HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பிரபலமான பள்ளி அது. அங்கு 110 ஆசிரியர்கள் வேலைபார்க்கிறார்கள்.

♥பிரபலமான பள்ளி அது. அங்கு 110 ஆசிரியர்கள் வேலைபார்க்கிறார்கள். அதில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆசிரியைகள். அவர்கள் அனைவரும் இணைந்து தங்களுக்குள் முக்கியமான தகவல்களை பகிர்ந்துகொள்வதற்காக வாட்ஸ்-அப் குழு ஒன்றை உருவாக்கினார்கள்.

♥ஆரம்பித்த புதிதில் கல்வி தொடர்புடைய பலனுள்ள விஷயங்கள் பலவற்றை பகி்ர்ந்தார்கள். பின்பு தங்களுக்கு வந்த மெசேஜ்களை பார்வேர்டு செய்தார்கள். அடுத்து ஒருசிலர் குட்மார்னிங் மட்டும் சொல்லும் அளவுக்கு அதில் பகிர்வுகள் குறைந்துகொண்டே வந்தன.

♥இப்படி வேகம் குறைந்துகொண்டே இருந்த அந்த வாட்ஸ்-அப் குழுவில் அன்று நள்ளிரவை தாண்டிய நேரத்தில், திடீரென்று ஒரு ஆபாச படம் வந்துவிழுந்தது. அது இளம் பெண் ஒருவரின் கழுத்துக்கு கீழ்ப் பகுதி முழுமையாக ஆடைகளின்றி தெரியும் படம். அந்த படம் இளம் ஆசிரியை ஒருவரது எண்ணில் இருந்து வந்திருந்தது. அவரது கணவர் மூன்று வருடமாக வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். திருமணமாகிய இரு மாதத்திலேயே சென்றுவிட்டார்.

♥மறுநாள் விடிந்ததும் வாட்ஸ்-அப் பக்கத்தை திறந்தவர்களுக்கெல்லாம் அந்த படம் அதிர்ச்சியை கொடுத்தது. பெரும்பாலான ஆசிரியைகளின் செல்போன்களை அவர்களது குழந்ைதகளே தோண்டித்துருவிக் கொண்டிருப்பதால், படத்தை உடனடியாக அழிக்க ஒவ்வொருவரும் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். 

♥இந்த நிலையில் பள்ளி முதல்வரும் வாட்ஸ்-அப்பில் அந்த படத்தை பார்த்தார். அவர் ஆத்திரத்தில் பொங்கினார். எந்த இளம் ஆசிரியையின் செல்போனில் இருந்து அது வந்ததோ அவரிடம் விசாரணை நடத்தி, அன்றே அவரை வேலையில் இருந்து நீக்கிவிடவேண்டும் என்ற முடிவில் இருந்தார்.

அன்று காலையில் வழக்கமான நேரத்திற்கு முன்னதாக கண்கள் சிவக்க வந்த அந்த இளம் ஆசிரியை நேராக முதல்வர் அறைக்கு சென்றார். ‘எனது செல்போனை இரண்டு நாட்களாக காணவில்லை. யாரோ திருடிச் சென்று விட்டார்கள். திருடியது எனக்கு தெரிந்த ஆணாகத்தான் இருக்கவேண்டும். என் கணவர் வெளிநாட்டில் வேலைபார்ப்பது தெரிந்து, எனக்கு தொந்தரவு தரவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் அந்த படத்தை என் போன் மூலமாக பதிவிட்டிருக்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை’ என்று அழுதார். 

முதல்வரும் எல்லா ஆசிரியர்களிடமும் அந்த இலக்கத்தை புளக் செய்யுமாறு கூறிவிட்டு மனமிறங்கி, ஆறுதல்கூறி அனுப்பிவைத்துவிட்டு, அந்த வாட்ஸ்-அப் குழுவையே கலைத்துவிடும்படி அனைத்து ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

♥இந்த விஷயத்தில் அடுத்து நடந்ததுதான் அதிரடியான திருப்பம். அந்த இளம் ஆசிரியை கல்லூரி பருவத்தில் விடுதியில் தங்கிப்படித்தபோது அவரோடு சேர்ந்து படித்த தோழி ஒருவர் இதே பள்ளியில் இ்ந்தி ஆசிரியையாக வேலைபார்க்கிறார். அவருக்கு இளம் ஆசிரியையின் உடல் வனப்பு ஆடை இல்லாமல் எப்படி இருக்கும் என்பது தெரியும்.

♥சிறிய மரு ஒன்றிற்காக மருந்து தேடி வந்தால் அந்த ஆசிரியை. வாட்ஸ்-அப் குழுவில் பதிவிட்ட படம் தலைக்கு கீழ் எடுக்கப்பட்டதால் முகம் அடையாளம் தெரியவில்லை என்றாலும், உடல் அந்த இளம் ஆசிரியைக்கு உரியதுதான் என்பதை இந்தி ஆசிரியை அந்த மருவை வைத்து கண்டுபிடித்துவிட்டார்.
♥இந்தி ஆசிரியை, அன்று இரவே இளம் ஆசிரியை வீட்டுக்கு சென்றார். ‘உன் படத்தை நீயே எடுத்து பதிவிட்டிருக்கிறாய். செல்போன் திருடுபோனது என்று நீ சொல்வது உண்மையல்ல. உன் தோழியான என்னிடமாவது உண்மையை சொல். என்ன நடந்தது? எப்படி நடந்தது?’ என்று வாஞ்சையோடு கேட்டார்.

‘♥வெளியே சொல்லிடாேதடீ என் மானமே போயிடும். இந்த இளம் வயதிலே நானும் என் கணவரும், தனித்தனியாக வாழ்கிறோம். எங்கள் மனதில் இருக்கும் அந்தரங்க ஆசைகளுக்கு இருவருமே அணை போட்டுவைத்திருக் கிறோம். தினமும் இரவில் நாங்கள் அந்தரங்கமாக பேசிக்கொள்ள வசதியாக நாங்கள் இருவருமே ஆடைகள் இல்லாமல் படங்கள் எடுத்து எங்களுக்குள் அனுப்பிக்கொள்வோம். அன்று என் படத்தை எடுத்து அவருக்கு அனுப்பும்போது கைதவறி நமது வாட்ஸ்-அப் குழுவுக்கும் போய்விட்டது. 

♥உண்மையை சொன்னால் அசிங்கமாகிவிடும் என்பதால்தான், செல்போன் திருடுபோய்விட்டது என்று பொய் சொன்னேன்..’ என்று கண்கலங்க தோழியிடம் சொன்னாள்.

♥ேதாழியின் கண்களும் கலங்கிவிட, ‘சரி.. சரி.. அழாதே.. இனியாவது கவனமாக பார்த்து செய். உன் கணவரை சீக்கிரம் ஊருக்கு அழைச்சிடு’ என்று கூறிவிட்டு விடைபெற்றார்

♥இன்று அதிக இளம் தம்பதியினர் தமக்கிடையில் இப்படி அந்தரங்க படங்களை  பரிமாறுவது வாடிக்கை ஆனால் இதில் மிக மிக அவதானமாக இருக்கவேண்டும்... என்பது இதன்மூலம் தெரிகிறது.

Post a Comment

0 Comments