HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சூப்பரான சமையல் குறிப்புகள்

♥சூப்பரான சமையல் குறிப்புகள்

♥முட்டை வாங்கி பிரிட்ஜில் வைக்கும் முன் முட்டைக் கூட்டில் சமையல் எண்ணெய்யைத் தடவி அதில்முட்டைகளை வைத்தால் கெடாது.

♥சீனி வைத்துள்ள பாட்டில் அல்லது ஜாரில் சிறிது கிராம்புத் துண்டுகளை போட்டு வைத்தால் எறும்பு வராது.

♥மீன், இறைச்சி ஆகியவற்றை சுத்தம் செய்யும்போது கையில் சிறிது தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்ளுங்கள்.வாடை அடிக்காது. கையில் பாதிப்பு ஏற்படாது.

♥பூரி செய்யும்போது மாவுடன் ரவையை வறுத்து சேர்த்து பிசைந்தால் பூரி சுவையுடனும், மொறுமொறுப்புடனும் இருக்கும்.

♥வீட்டில் எறும்புகள் தொல்லை இருந்தால் அதற்கு பெருங்காயத் தூளைத் தூவிவிடவும்.

♥இட்லி மாவு புளிக்காமல் இருக்க பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

♥துணிகளில் எண்ணெய், நீங்காத அழுக்கு இருந்தால் நீலகிரித் தைலத்தை சில சொட்டுகள் விட்டு சோப்பு போட்டு அலசினால் நீங்கும்.

♥வெள்ளிப் பாத்திரங்களின் பளபளப்பு மாறாமல் இருக்க அவ்வப்போது விபூதியைக் கொண்டு தேய்த்தால் பளபளப்புடன்இருக்கும்.

♥பூண்டு, வெங்காயம்,மாமிசம் இவற்றை கத்தியால் வெட்டும்போது துர்நாற்றம் வீசும். இதற்கு சிறிதளவு கல் உப்பை பொடித்து கத்தியில் தடவி நீரில் கழுவினால் போதும்.

♥பழங்களை கடைகளில் இருந்து வாங்கி வரும்போது வீட்டில் அவற்றை சிறிதளவு வினிகர் கலந்த நீரில் போட்டு கழுவி சாப்பிடலாம். கிருமிகள் இருக்காது.

♥அரிசி, கோதுமை போன்ற தானியங்களை போட்டு வைத்துள்ள பாத்திரத்தில் சிறிது வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் தொல்லை இருக்காது.

♥வாழைத் தண்டை பொடிப் பொடியாக நறுக்கி பக்கோடாவிற்கு கலந்து வைத்த மாவில் போட்டுப் பிசைந்து பக்கோடா செய்தால் சுவையாக இருக்கும்.

♥உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிது சேமியாவை தூள் செய்து போட்டு கலந்து வடை செய்தால் மொறு மொறுவென சுவை ஆக இருக்கும்.

♥கத்தரிக்காயை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி தயிர் சேர்க்க வேண்டும், கத்தரிக்காய் நன்றாக குழையும், ருசியும் கூடும்.

Post a Comment

0 Comments