மகளின் பாச மனம்..
தந்தையை பிரியும்போது..🙂
அப்பா!!- என்
சின்னஞ்சிறு தவறுகளை
அம்மாவிடம் மறைத்து-
அடம் பிடிக்கையில்-
அன்பாலென்
அழுகையை குறைத்து-
ஏதும் சாதிக்கையில்-
இவளென் ரத்தமென
பெருமையாய் உரைத்து-
என்னுயர்விற்காய்
உங்கள் கனவுகள் கரைத்து- என
இவையாவும்-
இன்றோடு முடிகிறது-
உங்கள் மகளாய் இருக்கும்-
இக்கடைசி தருணம்-வெறும்
கண்ணீராய் வடிகிறது!!!
இப்பாசம் திருப்பிட-
எனக்கொரு மகன்
பிறந்தால்-அதை
நீங்களென வளர்ப்பேன்-
தவறி மகளேதும்
பிறந்தால்-
உங்களிடமே தருவேன்-
ஏனெனில்-
நான் வளர்ந்தது
எப்படியென-எனக்குத்தெரியும்!!!..🙂
0 Comments
Thank you