HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அட, பாவி!

♥அட, பாவி!

♥"என் சர்டிபிகேட்சுக்கு ஜெராக்ஸ் காப்பீஸ்தான் வச்சிருக்கேனே? அதையும் ஒரு கெசடெட் ஆபீசர் அட்டஸ்ட் பண்ணணும்கறது என்ன சார் நியாயம்?'' என்று கத்தினேன்.
"அம்மா, இங்கே ரூல்ஸ் அப்படித்தான். இஷ்டம்னா அப்ளிகேஷனை ப்ராபர் எங்க்ளோசரோடக் குடு. இல்ல, போய்கினே இரு. என் டயத்த வேஸ்ட் பண்ணாத'' என்றார் குமாஸ்தா கரம்கூப்பி.

♥மனுக் கொடுப்பதற்கு இன்றுதான் கடைசி நாள். இந்த குமாஸ்தாவோ அப்ளிகேஷனை வாங்க மறுக்கிறார். இப்போது போய் அட்டெஸ்டேஷனுக்கு நான் எந்த ஆபீசரைத் தேடி அலைய? விட்டு விட வேண்டியதுதானா?
என் தோளில் ஒரு கை விழுந்தது.
""பாப்பா''
"அப்பா, நீயா எங்கே இங்க?''
"ஒரு வேலையா வந்தேம்மா. ஒனக்கு அட்டெஸ்டேஷன் வேணுமா? கொண்டா'' அப்பா வாங்கிக் கொண்டார்.

♥புகாரி ஓட்டல் மாதிரி நிறைய அரைத் தள்ளு கதவுகள் இருந்தன. அப்பா ஓர் அறையில் நுழைந்து வெளிப்பட்டார்.
"இந்தாம்மா. எதுக்கு இது?''
"இங்கே ஜூனியர் அசிஸ்டண்ட் வேலைக்குப்பா''
""சூச்சூ... எம்.ஏ. டிகிரி ஹோல்டர் நீ. அப்பா நான் இருக்கேன். நீ இந்தத் துக்கடா வேலைக்கு''
""ஸ்கிப் த முதலைக் கண்ணீர் அப்பா. ரொம்ப சென்டிமெண்டல் ஆகாத. அந்தக் குமாஸ்தா மூஞ்சில இந்த அப்ளிகேஷனைக் கடாசிட்டு வரேன், இந்தாய்யா. சரி பாத்துக்கன்னு''
"ஆஹாங். பொறுமை. பொறுமை. நானும் வரேன். இந்தா நீலகண்டா, கலாட்டாப் பண்ணாம மனுவை வாங்கு. என் மகதான்'' என்றார் அப்பா.

♥"உங்க பெண்ணா சார்?'' சோடாபுட்டிக் குமாஸ்தாவுக்கு வாயெல்லாம் பல்.
""போய்யா ஓணான் மூஞ்சி. உனக்கு சிரிக்க வேற தெரியுமா?''
"அப்புறம் என்னடா கண்ணு ப்ரோக்ராம்?''
""வீடுதான்''
"இன்னி ராத்திரி நீ என்னோட தங்கற. காலையில் நாம் இந்த ஆபீஸ் வர்றோம். எல்லா ஆபீசரும் எனக்குப் பழக்கம். உனக்கு சிபாரிசு பண்றேன்''
"உன் கூட நான் ஏம்பாத் தங்கணும்? வீட்டுக்குப் போயிட்டுக் காலையில நேரா இங்கே வந்துடறேன். நீயும் வா''
"சரிம்மா உன் இஷ்டம்'' என்று அப்பா முகம் வாடியவராக கண்ணாடியைக் கழற்றி, கைக்குட்டையால் கண்களின் ஈரத்தை ஒற்றினார்.

♥"அப்பா... பாவம்'
"அடாடா, அழறியாப்பா? சாரி. சரி, இப்ப உன் கூட வீட்டுக்கு வர்றேன், சரிதானே?'' அப்பாவின் தோளை அணைத்தேன்.
""வாடி கண்ணு, காபி சாப்பிடுவோம்..'' அப்பா காண்டீனுள் நுழைந்தார்.
""ஸ்வீட், போண்டா, ஐஸ்கிரீம், காபி''
ஸ்வீட் ஒரு பொட்டலம் நானும் வாங்கிக் கொண்டேன். அனுமாரியை இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கப் போகிறேன், வெறும் கையோடு போகமுடியுமா.

♥அனுமாரி- இந்த பதம் எனக்கு சிரிப்புத் தந்தது. என் தங்கை பாரதிதான் இந்தச் சொல்லைக் கண்டு பிடித்தவள்.
எவன் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டாலும் என் தங்கைக்குப் பிடிக்காது. முதல் மனைவி இறந்த ஒரே மாதத்தில் இரண்டாவது திருமணம் முடித்த நடிகன் நடித்த சினிமா போஸ்டரைப் பார்த்து, ""மூஞ்சியையும் முகரக்கட்டையையும் பார், குரங்கு'' என்று ஒரு சமயம் சீறினாள். இவனே அவளைக் கொன்றிருப்பான்.

♥குரங்கு என்கிற சொல் அடிக்கடி என் தங்கை வாயில் வரும். அவளைப் பொறுத்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்பவன் குரங்கு, இங்கே அப்பாவைச் சொல்ல முடியவில்லை, வந்தவள் அனுமாரி.
சென்ற மாதம் ஓர் இரவு அம்மா சமையல் அறையில் பிசியாக இருக்கையில், ""பாரதி அடியே ஊஷ்'' என்றாள். நான் தான் உஷா.
"இன்னிக்கு மவுண்ட்ரோடு ஹிக்கின்பாதம்சில் அப்பாவைப் பார்த்தேன். அப் என்று கூப்பிட வாய் எடுத்தேன். ஆனால் பக்கத்தில் நெம்பர் டூ இருந்தது. சத்தம் காட்டாமல் திரும்பிட்டேன்''

♥"அப்பாவுக்குப் புத்திப் போச்சு பார். வயசுக்கு வந்த, வர இருக்கிற மூணு பெண்களுக்கு அப்பன்கற நினைப்பு இல்லாம காதல் கல்யாணம்''
"உஷ்... அம்மா, அம்மா''
""மெதுவாக் குடிம்மா'' அப்பா என் தலையை வருடினார்.
காண்டீனை விட்டு வந்ததும் அப்பா ஓர் ஆட்டோவில் என்னை ஏற்றினார். பஸ்சிலேயே போகலாமே? அப்பா கேட்க மாட்டார். அதிகமாகப் பணம் செலவழிப்பது அவருக்குப் பொருட்டல்ல, அன்பையும் அப்படித்தான் அதிகமாக வர்ஷிப்பார். அப்படிப்பட்ட அப்பா தான் கடந்த ஐந்து வருடங்களாக நெம்பர் டூவின் வீடே கதி என்று ஆகிவிட்டார், மாதத்தில் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வருவார்.

♥""காசு பணத்தைப் பார்த்து செலவழிப்பா, பெரிய குடும்பஸ்தன் ஆயிட்ட. ரெண்டாவது கல்யாணம் பண்ணி மேலும் இரண்டு குழந்தைகளை உற்பத்திப் பண்ணீட்ட''
"கழுதை'' என்று அப்பா என் கன்னத்தைக்
கிள்ளினார்.
பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அப்பாவைப் பார்த்தேன் கண்ணுக்கு அருகில், காக்கைப் பாதம் வந்தாயிற்று, ஆட்டோ ஓடும்போது முன்புறக் கம்பியைப் பிடித்துக் கொண்டார். ஒல்லிக் கைகள், புறங்கையில் நரம்புகள் புடைத்து. மணிக்கட்டில் கறுப்பு காசிக் கயிறு,

♥தாடைகள் ஒட்ட ஆரம்பித்து விட்டன. தலை முடியை மட்டும் பின் கழுத்தில் புரள விட்டிருந்தார். நெற்றியில் குங்குமப் பொட்டு. கிருதாக்கள் முற்றிலும் நரைத்து விட்டன. தாடைகளிலும் வெள்ளி இழைகள். மீசையின் மேற்புறம் வெள்ளையாகவும் கீழே கறுப்பு ஓடியும் வேடிக்கையாக இருந்தது.
""ரிடயர் ஆக இன்னும் எத்தனை வருஷம்பா?''
""மூணுதான். கல்தாக் கொடுத்திடுவான்.''
"அய்யோ, சிரிக்காதேயேப்பா. உன் கடைவாய்ப் பற்கள் மிஸ்சிங். ஹும்... அவனவன் சர்வீஸில் இருக்கும்போதே சொந்த வீடு கட்டி முடித்துவிடுகிறான், ஸ்கூட்டரில் பறக்கிறான், பிசினஸ்கூட ஆரம்பிக்கிறான். இல்லை, ஷேர் சர்டிபிகேட்சாவது வாங்கிப் போடுகிறான். எங்களுக்கென்று வந்து சேர்ந்தாயே பண்டார சந்நிதி, அப்பா'' என்று சொல்லிக் கொண்டு, இருந்தபோது,

♥"ஆட்டோவை இப்படி சந்துக்கா திருப்புப்பா'' என்று அப்பா சொல்ல ஆட்டோ நின்றது. "ஒரு நிமிஷம் பாப்பா'' அப்பா இறங்கிச் சென்றார்.
"சிவகாமி க்ரெச்' அதனுள் தான் அப்பா சென்றார்.
டால்ஃபின் கார் ஒன்றை பாப் தலைக்காரி ஒருத்தி ஓட்டிச் சென்றாள். லிப்ஸ்டிக் தடவி இருந்தாள், ரவிக் அணிந்திருந்தாள்.
ஜீன்ஸ் பேண்டுக்காரி ஸ்கூட்டர் ஓட்ட ஓர் இளைஞன் அவளின் பின்னால் அமர்ந்து சென்றான் .

♥சந்து முனையில் ஒரு கிழவன் வேட்டியை வழித்து உட்கார்ந்தான். அவன் அருகிலேயே மற்றொரு வாலிபனும் வந்து சுவரைப் பார்த்து நின்று. எங்கள் ஆட்டோ ஒரு வீட்டின் வாசலில் நின்றிருந்தது. அந்த பங்களாவின் உட்புறம் முன்புற போர்டிகோவில் தொங்கும் பிரம்பு ஆசனத்தில் அமர்ந்து ஒரு யுவதி ஏதோ புத்தகம் படித்தாள். ஸ்லீவ்லெஸ் கையை உயர்த்தி அவ்வப்போது ஷாம்பு குளித்த தன் கூந்தலை வருடினாள்.
அப்பா வந்தார் ஒன்றரை வயதுப் பெண் குழந்தையை நடத்தி.

♥"அக்காவுக்கு வணக்கம் சொல்லு''
ஆட்டோ புறப்பட்டது.
"என்ன பேரு இந்தக் குட்டிக்கு?''
""விசாலாட்சி. விசா''
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அப்பாவுக்கு இந்தப் பெயர் ரொம்பப் பிடிக்கும். இது அவரின் அம்மாவின் பெயர். எங்கள் மூவருக்கும் இந்தப் பெயரைச் சூட்ட அம்மா மறுத்து விட்டாளாம். உஷா, பாரதி, நவீனா என்று தான் பெயர் வைக்க முடிந்தது.
விசா பிஞ்சுக் கைகளால் என் கன்னத்தைத் தொட்டது. "ஜில்' என்றது. எனக்குப் புல்லரித்தது. ஆனால் இந்தக் குட்டியின் கீழ் உதட்டில் சற்றுத் தடித்து.
""பிறந்ததே அப்படித்தான். சிசேரியன் கேஸ். கத்தி குழந்தையின் உதட்டில் பட்டிருக்கலாம் என்கிறார்கள்'' என்றார் அப்பா.

♥குழந்தை சிரித்தது. என் கன்னத்தில் தட்டியது. ஆசையோடு வாரி அணைத்தேன்.
"அதோ, வாசல்ல ஒரு பையன் நிக்றானே. அந்த வீடுப்பா'' என்றார் அப்பா.
"நம்ம பையன் தான்''
பள்ளிச் சீருடையிலேயே இருந்தான். ஷூவையும் கழற்றவில்லை. வாசல் கோலத்தின் மீது நின்று தன் சட்டைப் பித்தான்களைத் திருகி.
கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால் குழந்தைகள் இப்படிக் கவனிப்பார் அற்று நிற்க வேண்டியது தான்.

♥வீட்டினுள் வந்தோம்.
""குட்டியைப் பாத்துக்கோ பாப்பா. பையனுக்கு பூஸ்ட் கலக்றேன்''
"நீ இருப்பா. நா செய்றேன்''
"அய்யோ, இந்தப்பய குடிக்க மாட்டாம்மா. நானோ, அம்மாவோதான் போடணும்'' அப்பா காûஸப் பற்ற வைத்தார்.
""டேய், உன் பேர் என்னடா, எந்த கிளாஸ்?'' என்றேன்.
""சொல்லு. அக்கா கேக்றா இல்ல'' அப்பா ஆவின் சேஷேவைக் கிழித்து பாலை அடுப்பின்மீது வைத்த பாத்திரத்தில் ஊற்றியபடி சொல்ல,
""கிருஷ்ண காந்த். யுகேஜி''
பையனுக்கு நல்ல சுருட்டை முடி. நல்ல நிறமாக இருந்தான். பேசும்போது நாக்கு அழகாக மடிந்தது.

♥ஸ்டூல் மீது கால்வைத்து மேசைமீது ஏறி ஒரு டப்பாவை எடுத்தான். சிறிய பிளாஸ்டிக் தட்டுகள் ஸ்டாண்டு. பூப்போட்ட அன் பிரேக்கபிள் தட்டு எடுத்து நான்கு பிஸ்கட்ஸ் வைத்தான். ஃப்ரிட்ஜ் திறந்து ஒரு பாட்டில் நீர் எடுத்து என் அருகில் வைத்தான். "எடுத்துக்கோ அக்கா''
"அசத்திட்டியேடா பய்யா'' என்று அவனை அருகில் இழுத்து அணைத்தேன்.
அவன் என்னிடமிருந்து விடுபட்டு, தங்கை விளையாட விளையாட்டுப் பொம்மைகளை எடுத்துப் போட்டு அவளையும் குறிப்பிட்ட இடம்விட்டு நகராமல் மடக்கிப் போட்டான்.
""கிருஷ்ணா'' என்றார் அப்பா, மூன்று கிளாசை எடுத்து நீட்டினார்.
"இந்தக் குட்டிக்கு'' என்றேன்.

♥கிருஷ்ணன் கட்டில்மீது தலையணை வைத்தான். விசாவை கட்டிலில் ஏற்றினான். ஃபீடிங் பாட்டில் பாலை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான். குட்டி படுத்து தானே பாட்டிலை வாயில் வைத்துக்கொண்டது.
தினசரிகள், துணிமணிகள் அவற்றின் இடத்தில் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தன. சுவரில் ஒரே ஒரு காலண்டர். ஓரமாக சிறிய டி.வி. மேசையின் கோடியில் அப்பா தினமும் வழிபடும் நந்திப் பொம்மை.
நாங்கள் குடி இருக்கும் வீடு, இவர்கள் இருக்கும் வீட்டைவிடப் பெரியது. அப்படியும் அம்மா வீட்டை அழகாக வைத்துக் கொண்டதில்லை. கண்ட இடத்தில் கண்டது கிடக்கும்.

♥"அய்ய, சர்க்கரையை ஏன் அப்படி அள்ளிப் போட்டுப் பாயசமா அடிச்சுட்ட அப்பா?''
"நீ வந்த சந்தோஷத்துல கை நிதானத்துல இல்லடி கண்ணு''
கிருஷ்ணா வாசலுக்கு விளையாடப் போய்விட்டான். விசா படுத்தபடி ஏதோ புத்தகத்தில் பொம்மை பார்த்தது, கால்மீது கால்வேறு போட்டு
""நாகார்ஜுன்காரு''
அப்பாவின் வாடிக்கையாளர்கள் வந்தாயிற்று, அப்பாவுக்கு உலகமே மறந்துவிடும்.

♥ஜாதகம், ஜோஸ்யம். தோஷப் பரிகாரம்.
"ரண்டி, ரண்டி பாக உன்னாரா. பாக்கறதே அபூர்வமா இருக்கே? மழையைக் கொண்டு வந்துடாதீங்க.''
""நாங்க சொல்ல வேண்டியத நீங்க முந்திக்கிட்டுச் சொல்லிடுங்க''
வந்த தம்பதிகள் பிஸ்கட் பாக்கெட்டை, ஆப்பிள்களை மேசை மீது வைத்தனர். ஜோஸ்யம் சொல்லிச் சொல்லி அப்பா கண்டது பிஸ்கட்தான்.
"பணம் கொடுத்தாலும் வேண்டாம், ஜோஸ்யக் கலையை விற்கமாட்டேன். வயித்துப் பாட்டுக்குத்தான் குமாஸ்தா வேலைப் பாக்றேனே'' என்பார்.

♥ஜோஸ்யத்திற்குக் காசு வேண்டாம் என்பாரே தவிர அப்பாவுக்குத் தன்னைப் பற்றிப் பெரிய அபிப்ராயம்.
""ரெண்டு நாள் முன்னால பாப்பா, டெல்லிக் குடும்பம் ஒண்ணு வந்தது. குடும்பத் தலைவர். ஜாகத்தைப் பார்த்துச் சொல்ல ஆரம்பிக்கிறேன். அப்படியே அந்தக் குடும்பமே அழுவுது. நடந்தது பூரா அட்சர சுத்தமா சொல்லீட்டீங்க சாமி. ஒரு மணி நேரத்துல குடும்ப நபர்கள் அத்தனைபேருக்கும் சொல்லி முடிச்சிட்டேன். அவங்க கார்ல என்னையும், உன் சித்தியையும் ஏத்திக்கிட்டு ஃபைவ் ஸ்டார் ஓட்டலுக்குக் கூட்டிப் போய் தூள் கிளப்பிட்டாங்க. 

♥நமக்குச் சாப்பிடத்தான் வயிறு இல்ல. மறுபடி வீட்டுக்கே கொணாந்து இறக்கிவிட்டு, என் பைல கட்டாயமா ஒரு கவரை திணிச்சு அட வடநாட்டான் கை தாராளம்தான். பத்து நூறு ரூவா நோட்டு''
"அப்ப. உன் ரேட் அதுதான் அஞ்சு, பத்து வாங்க மாட்ட கோவில் யானைகூட, குறைவா குடுத்தா வாங்குறது இல்ல. மினிமம் அஞ்சு ரூபாதான்'' என்றேன்.
""சுத்தி வளைச்சு என்னை காஸ்ட்லி பிச்சைக்காரன்கற''
"ஏன்டா பனீல வந்து நிக்ற, பாடம் படிக்காம?'' வாசலில் பெண் குரலும், செருப்பு விடும் சத்தமும்.
உள்ளே வந்தவளைக் கவனித்தேன். மூஞ்சூறு மூஞ்சியும், மூக்கு கண்ணாடியும், எலி வால் பின்னலும். அனுமாரி.

♥""வாம்மா'' புன்னகை.
""பாப்பாவுக்கு நான் பூஸ்ட் குடுத்துட்டேன்'' என்றார் அப்பா.
"பரவாயில்ல. நான் காபி குடுக்றேன், சுமாரா இருக்கும் பாப்பா, பயப்படாதே'' என்றாள்.
சட்டென்று பாத்ரூமில் நுழைந்து, குளித்து, வேற்றுடை மாற்றிவந்து, களைந்த துணி உடனே அழுக்குக் கூடையில் மறைந்துவிட்டது. அம்மாவானால் கண் எதிரே அப்படியே தரையில் கிடக்கும்.
இவள் குளித்த உடனே நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு விட்டாள். என் அம்மா வெறும் நெற்றியுடன் சமையல் செய்து கொண்டிருப்பாள்.
அப்பா கேட்பார்: "எப்போ மதம் மாறினே?''
காஸ் மூட்டி... ஹை... காபின்னாலும் காபி, அம்மா இப்படி ஒருநாளும், ருசியான காபி போட்டதில்லை.
ஜோஸ்யம் பார்க்க வந்த பார்ட்டியும் காபி சாப்பிட்டுப் புறப்பட்டது.

♥"ஆபீஸ்லேந்து நீ வந்ததே லேட்டு. அதனால் பாப்பாவுக்கு மட்டும் சப்பாத்தி பண்ணு. நமக்குக் காலை மீதச்சோறு போதும்'' என்றார் அப்பா.
"அழகா இருக்கே நீங்க பேசறது? வராத குழந்தை வந்திருக்கா, சப்பாத்தியாமே சப்பாத்தி. நீங்க விசாவைப் பார்த்துக்குங்க. நானும், பாப்பாவும் போய் காய் வாங்கி வந்திடுறோம்'' என்றாள் அவள்.
"போ... பாப்பாவுக்கு அஜீரணம் தரப்போற. பாப்பா சித்தி சமையல் சுமாரா இருக்கும் சாப்பிட்டு வை. இன்னிக்கு நீ வசமா மாட்டின?'' என்றார் அப்பா.

♥""பாப்பா, உனக்கு என்ன காய் பிடிக்கும்? அதையே வாங்குவோம்'' என்றாள் அவள்.
""கிருஷ்ணா, உனக்கு என்ன காய் பிடிக்கும்? உருளைக் கிழங்குதானே?'' என்றேன்.
"எல்லாக் குழந்தைகளுக்கும் உருளை கிழங்கு பிடிக்கும்'' என்றவள், ""பாப்பா நீ வந்தது பற்றி ரொம்ப சந்தோஷம். ரெண்டுநாள் இருந்துட்டுப் போயேன். உன் தங்கைகளையும் அம்மாவையும் கூட பார்க்க ஆசை'' என்றாள்.
கிருஷ்ணனுக்கு சிக்லட்ஸ் வாங்கிக் கொடுத்தேன்.
""குடு அக்கா'' என்று கிருஷ்ணா காய்கறிக் கூடையை எடுத்துக் கொண்டு நடந்தான்.

♥வீட்டில் டி.வி.யில் நியூஸ் வாசித்தார்கள். அப்பா ஈசிசேரில் அஸ்ட்றலாஜிகல் மேகசீனை மார்பில் பிரித்துக் கவிழ்த்து மூக்குக் கண்ணாடியோடு குறட்டை விட்டார். விசா, தரையில் அமர்ந்து சொப்புகளுடன் தானே விளையாடியது. ஓசை கேட்டு விழித்தார்.
" வந்தாச்சா?''
"இங்கே மொட்டை மாடியில் நல்ல காத்துவரும் பாப்பா''
அப்பாவோடு மொட்டை மாடியில் நான் நட்சத்திர வானைப் பார்த்திருந்தேன். கிருஷ்ணாவை அவள் கீழேயே இருந்திக் கொண்டு விட்டாள். நாகரீகம் தெரிந்தவள்.

♥"எப்படிப்பா மனசார இந்தம்மாவப் புடிச்ச?''
"நா புடிக்கல. ஆபீஸ்ல இவதான் எங்கிட்ட அடிக்கடி ஜோசியம் கேக்க வந்தா. ஒரு நாள் என் மணிக்கட்டைக் கெட்டியாப் புடிச்சுக்கிட்டு, இந்த ஜென்மத்துல நீங்கதான் என் புருஷன், சரின்னு சொல்லல. நாளைக் காலைல நம் ஆபீஸ் வாசல்ல அரசு ஊழியர் சங்கம் எனக்கு இரங்கல் செய்தி எழுதி வெக்கறதப் படிப்பீங்க. இது சத்தியம்னு அழுதா''
"மனசு எளகி, தாலியைக் கட்டிட்டியாக்கும்? போகட்டுமே அந்த உயிர் அப்படித்தான். இன்னொருத்தி வாழ்க்கையைப் பறிக்கறமேன்னு நினைக்காதவ இருந்தென்ன, போயென்ன?''

♥""விதிம்மா விதி. என் தலைல ரெண்டு பெண்டாட்டிகாரன்னு எழுதி இருக்கே?''
"அம்மா தலைல ரெண்டு புருஷன்காரின்னு எழுதி இருந்தா என்ன செய்வ?''
""விமன்ஸ்லிப் பிரதிநிதியா பேசற?'' என்று அப்பா பெருமூச்செறிந்தார்.
வானில் கோடிக் கணக்கான நட்சத்திரங்கள் பூத்துக் கிடந்தன. சில் வண்டுச் சத்தம். அடுத்த தெருவில் சென்ற அரசு பஸ்சின் டாப் தெரிந்தது.
கிருஷ்ணா படி ஏறி வந்தான்.
"அக்கா, அப்பா சாப்பிட வரலாம். அம்மா சொல்லச் சொன்னாங்க.''
படி இறங்கினோம்.

♥"என்ன மேடம், பாப்பா தைர்யமா சாப்பிடலாம் இல்ல'' என்று அப்பா அவள் முதுகை அணைத்தார்.
""குழந்தையை ரொம்பத்தான் பயமுறுத்தறீங்க'' என்று சிரித்தாள் அவள், குனிந்து பெருக்கியவள் குப்பையைக் கதவு மூலைக்குத் தள்ளி. தன்னை அப்பாவின் பிடியிலிருந்து அவள் விடுவித்துக் கொள்ளவில்லை.
அம்மா இப்படிச் சும்மா இருக்கமாட்டாள். காலை என்றால், ""ஹ்ம், நல்ல நாளும் அதுவுமா தொட்டுட்டீங்களா? இப்பத்தான் குளிச்சிட்டு வந்தேன். இன்னும் சுவாமி தீபம்கூட ஏற்றலை. மறுபடி குளிக்கணும்'' என்று சிலிர்த்து ஒதுங்குவாள்.

♥ராத்திரி என்றால் "சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருந்து ரெண்டு பழம் மட்டும் சாப்பிட்டு நியம நிஷ்டையோடு இருக்கேன். கிட்ட வந்து ஏடாகூடம் பண்ணிப்பிடாதீங்க'' என்பாள்.
மாதத்தில் இருபத்தைந்து நாட்கள் பூஜை. விரதம் நல்ல நாள்...
அப்பா, கிருஷ்ணா, நான் மூவரும் தரையில் அமர்ந்து சாப்பிட்டோம். சமையல் ரொம்பவும் தரம். நெம்பர் டூவிடம் முக லட்சணம் இல்லாத போதிலும்.

♥பிறகு அவள் தனியே சாப்பிட்ட போதும் என்னை உதவிக்குக் கூப்பிடவில்லை.
அப்பா தாம்பூலம் தரித்தார்.
கிருஷ்ணா அப்பாவின் பை, என் பை, அவன் அம்மாவின் பை, இறைந்து கிடந்த புத்தகங்களை எடுத்து ஒரு பக்கம் வைத்தான். ஊறுகாய் பாட்டிலை மூடி வைத்தான். தன்ணீர் டம்ளர்களை சமையல் மேடைமீது அடுக்கினான். மீந்த சாதம் குழம்பை மூடி காஸ் அடுப்பு மீது வைத்தான்.
"இதெல்லாம் நான் செய்ய மாட்டேனாடா?'' என்றேன்.
விசா கட்டிலில் தூங்கியது.
அவள் எழுந்து வந்து பாலைச் சுடவைத்தாள்.

♥கையோடு கொண்டு சென்றிருந்த, கென்ஃபாலட் நாவல் படித்திருந்தேன். (அய் ஆஃப் த நீடில்)
அப்பா இரட்டைக் கட்டிலை ஒழுங்கு செய்தார். அவள் எல்லார்க்கும் பால் கொணர்ந்தாள்.
""நான் விசாவோடு தரையில் படுத்துக்கறேன். பாய் போடுங்க. நீங்க எல்லாம் கட்டில்ல படுங்க. பாப்பா, வேற ட்ரெஸ் மாத்தலையா?'' என்றாள்.
"ஊஹூம்' என்று சுடிதாருடனே படுத்தேன். அருகில் கிருஷ்ணா, அந்த ஓரம் அப்பா.
எல்லாக் கதவுகளையும் தாழ்போட்டு, சொட்டும் குழாயை இறுக்கி, சைபர் வாட்ûஸ எரியவிட்டு, விளக்குகளை அணைத்து, பாயில் படுத்தாள் அவள். கொதிக்கும் எண்ணெய்யில் வறுவல் வதங்கும் ஓசையுடன் தலைக்கு மேல் ஃபேன் சுழன்றது.

♥தூக்கமே வரவில்லை. எல்லோரும் உறங்கி ஆயிற்று. கொட்ட கொட்ட விழித்து படுத்திருந்தேன்.
சுமார் ரக அழகி என்றாலும், இவள் எல்லா விஷயங்களிலும் கெட்டிக்காரியாக இருக்கிறாள்.
அம்மாவுக்கு இவ்வளவு சாமர்த்தியம் கிடையாது, எல்லா வேலைகளிலும் அவள் சுமார்தான்.
அப்பா, தனக்கு வரவேண்டிய மனைவி எப்படி எப்படி இருக்க வேண்டும் என்று கனவுச் சித்திரம் வைத்திருந்தாரோ? அம்மாவை மனைவியாக அடைந்ததில் ஏமாற்றமும், எரிச்சலும் அடைந்தாரோ? தன் எதிர்பார்ப்புகளின் உருவமாக இவள் வரவும், இவளைச் சேர்த்துக் கொண்டு விட்டாரோ? இப்போது இவர் மனக் குறைகள் நீங்கி. பிறவிப் பயனைப் பெற்றுவிட்டதாக நினைக்கிறாரோ?
"கொர்கொர்கொர்..'

♥அட.. சட்... அப்பா குறட்டை விட ஆரம்பித்துவிட்டாரா? இரவு முழுவதும் இந்தச் சத்தத்தை என்னால் சகிக்கவும் முடியாது; தூங்கவும் முடியாது.
"அப்பா, குறட்டை விடாதே'' என்று அவரின் கையை கிள்ளினேன். குறட்டை நின்றது.
அப்பாவால் அம்மாவின் குறைகளைப் பொறுக்க முடியாமல் இன்னொருத்தியைத் தேட முடிந்தது. ஆனால் இவரிடம் குறைகளே இல்லையா?
எவ்வளவு?
ஒன்றா? இரண்டா?
மறுபடி ஆரம்பித்துவிட்டது "கொர்ர்ர்ர்'
"போ, இன்றிரவு சிவராத்திரி தான்.'
அம்மாவின் போக்கை இவரால் சகிக்க முடியவில்லை. இன்னொன்று தேடினார். ஆனால் அம்மா மட்டும் இவரை இவரின் சகல குறைபாடுகளோடும் அங்கீகரித்துக் குடும்பம் நடத்தி வருகிறாள். அவளின் பொறுமை இவருக்கு ஏன் இல்லை? பெரும்பான்மை இந்தியப் பெண்களின் கம்பீரமான சாந்த குணம் அம்மாவுக்கு. அம்மாவின் பெருந்தன்மையை நினைக்கும்போது "அம்மா த கிரேட்' என்று கத்தவேண்டும் போலிருக்கிறது.

♥"அப்பா, நீ அவசரப்பட்டு அசடு வழிந்தது மன்னிக்க முடியாதது. ஏற்றுக்கொள்ள முடியாதது. நீ தவறு செய்துவிட்டாய், தவறு செய்து விட்டாய் என்று ஆயிரம் முறை சொல்வேன்.'
மெல்ல மெல்ல நான் உறக்கத்தில்.


Post a Comment

0 Comments