HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கிச்சன் டிப்ஸ்

♥கிச்சன் டிப்ஸ்

♥காய்ந்த மிளகாயை நீளவாக்கில் கிழித்த பிறகு எண்ணெயில் விதைகள் சிவக்கும் அளவுக்கு வறுத்துப் பிறகு துவையல் செய்தால் சுவையும், மணமும் அலாதியாக இருக்கும்.

♥அடுப்பில் வைக்கும்போது பாத்திரங்களின் மேல் விளிம்பிலிருந்து உள்புறம் வரை அரை அங்குல அளவிற்கு ஏதாவது எண்ணெயைச் சுற்றித் தடவினால் பொங்கி வழியாது.

♥ ஈரமான காபி ஃபில்டரில் காபிப் பொடியைப் போட்டால் அடைத்துக்கொள்ளும். எனவே ஃபில்டரை சூடு காட்டிய பிறகு பொடியைப் போட்டு வெந்நீர் ஊற்றினால் டிகாஷன் நன்றாகவும், சீராகவும் இறங்கும்.
- ஆர்ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

♥ ஜாம் கெட்டியாகி விட்டால், அதனை பாத்திரத்தோடு சிறிது நேரம் சுடுநீரில் வைக்க இளகி வந்துவிடும்.

♥ வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு எண்ணெய் கறி தயாரிக்கும்போது ஒரு கைப்பிடி பலாக்கொட்டையை தோல் நீக்கி, துருவி சேர்த்து செய்ய பொரியல் மொறு, மொறுவென்று சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

♥ உளுத்தம்பருப்பு - 1 கப், மிளகாய் வற்றல் - 6, பச்சரிசி - 1 டீஸ்பூன் எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்து வைத்துக்கொண்டால் தேங்காய் சேர்க்கும் வகைக்கு உபயோகித்தால் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
- வரலட்சுமி முத்துசாமி, சென்னை.

♥சலித்த சப்பாத்தி மாவுக் கப்பியை வீணாக்காமல் அடை மாவில் கலந்து அடை தயாரிக்கலாம்.                                                    
 - டி.எச்.லோகாவதி, மதுரை.

♥கேக் மாவுடன் கொஞ்சம் ஆரஞ்சுப்பழச்சாறு சேர்த்தால் கேக் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.                                             
- க.நாகமுத்து, திண்டுக்கல்.

♥சின்ன வெங்காயத்தை சமைக்கும் முன்பு சிறிது நேரம் பாலில் ஊற வைத்து பயன்படுத்தினால் சத்தும், சுவையும் அதிகரிக்கும்.
 - எஸ்.சடையப்பன், திண்டுக்கல்.

♥முருங்கைக்கீரையும், வெங்காயமும் பொடியாக அரிந்து வைத்துக்கொண்டு, கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, கடலை மாவு மூன்றையும் சம அளவில் கலந்து, அத்துடன் முருங்கைக்கீரையையும், வெங்காயமும் சேர்த்து பிசைந்து போண்டாவாக செய்து சாப்பிட்டால், சுவையாக இருப்பதுடன், சர்க்கரை நோயாளிகளுக்கும் மருந்தாகவும் இருக்கும்.
 - வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம்.

♥ பேரீச்சம்பழ சுளைகளை நன்றாகக் கழுவி, தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைத்து அப்படியே மிக்ஸியில் இட்டு அரைத்து ஏலக்காய் தூள், தேன் கலந்து சாப்பிடவும். இது ஒரு இரும்புச்சத்து மிக்க டானிக்காகும். எலும்பு வளர்ச்சி, நரம்பு உறுதி, மூளைக்கு வலிமை, இருதய பலம் பெற உதவுகிறது. கண் பார்வைக்கும் நன்மை அளிக்கிறது.
- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.

♥குருமாவில் முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கி மேலே தூவி உலர் திராட்சைப்பழம் சேர்த்தால் சுவை சூப்பராகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
* எலுமிச்சை ஊறுகாய் போடும்போது தோல் நீக்கிய இஞ்சித் துண்டுகளாக வதக்கி அதனுடன் சேர்த்தால் சுவை கூடும். எந்த ஊறுகாயும் கடுகு எண்ணெய் சேர்த்துச் செய்தால் கெட்டுப்போகாமல் இருக்கும்.
- ந.செண்பகவல்லி, பாளையங்கோட்டை.

♥ பருப்புப் பொடியுடன் சிறிது கசகசாவையும் வறுத்து பொடி செய்து சேர்த்தால் குழம்புக்கூட்டு கெட்டியாக இருக்கும்.

♥நல்ல மண் சட்டியில் மீன் குழம்பு வைத்தால் இரண்டு நாட்களானாலும் குழம்பு கெடாமல் வாசனையாக இருக்கும்.

♥ முட்டைகளின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி வைத்தால் முட்டை கெட்டுப் போகாது.
- ஆர்.அம்மணி ரெங்கசாமி, வடுகப்பட்டி.

♥ஜவ்வரிசி கஞ்சியில் வெல்லம் போட்டு சாப்பிட்டால் குளிர்ச்சியாக  பாயசம் போல இருக்கும்.

♥பாத்திரங்கள் அடிபிடித்து விடும்போது வெங்காயத்தை நறுக்கி பாத்திரத்தில் போட்டு சிறிது நீர் ஊற்றி வேக வைத்து பிறகு தேய்த்துக் கழுவினால் அடி பிடித்த சுவடே இருக்காது.
- கே.ஆர்.வசந்தகுமாரி, சென்னை.

♥தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

♥காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
- கே.முத்துசாமி, ராமநாதபுரம்.

♥ பீன்ஸ் பருப்புகளை வேக வைக்கும்போது முதலிலேயே உப்பு போடக்கூடாது. வேக நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும்.
- ஹெச். ராஜேஸ்வரி, மாங்காடு.

♥ பச்சை மிளகாயை காம்பை எடுத்துவிட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
- வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம்.

♥சப்பாத்தி - பூரிக்கு மாவு பிசையும்போது சிறிதளவு கடலை மாவையும் கலந்தால் சுவையாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.
- அ.பவானி, வயலூர்.

♥வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது, முன்னதாகச் சிறிது வெல்லம்  அதில் போட்டு இறக்கவும். நெய் கூடுதல் மணத்துடன், சுவையுடன் இருக்கும்.

♥முதலில் மிளகாயுடன் சிறிது கல் உப்புச் சேர்த்து அரைத்தால் நன்கு அரைபடும். பிறகு அதனுடன் மற்றப் பொருட்களைச் சேர்த்து அரைக்கலாம்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி

Post a Comment

0 Comments