♥திருமணம் நடந்து சிலமணி நேரத்தில் கணவன் மனைவி.......
♥மனைவி :! உங்க கூட நான் இனி வாழ போறேன் காலம் எல்லாம் நான் உங்களை பாத்துக்கனும்... நீங்க என்னை எப்படி பாத்துக்குவீங்க
♥கணவன்::! உன்னை என்னால் முடிந்தவரை சந்தோசமாக பாத்துக்குவேன்
உன் கண்ணுல என்மூலமா கண்ணீர் வர விடமாட்டேன். எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்
♥உனக்கு தேவையான எல்லாம் வாங்கி தருவேன்.. உன் தேவை என்ன என்பதை அறிந்து நடப்பேன்.. நீ ஆசைப்படுவதை வாங்கி தருவேன்..
♥உனக்கு நல்ல விதமான மரியாைதை தருவேன்.. உன் பிறந்த வீடு போல் இங்கும் மகிழ்ச்சியாக மரியாதையாக வைத்திருப்பேன்... சரிசமமாக நடத்துவேன்...
உன்னை கஷ்டபடுத்தமாட்டேன்
சரியா....!
♥மனைவி::! இல்ல இல்ல... இது தப்பு ......இதுல வர்ற மாதிரிஎல்லாம் என்னை நீங்க பார்க்கவேண்டாம்.......?? பார்க்கவும் முடியாது... அதுதான் உண்மை
ஒருத்தர வாழ்க்கையில எப்பவுமே சந்தோசமா பாத்துக்க கண்டிப்பா முடியாது
இது பொய் அப்படினு உங்களுக்கே தெரியும்
அப்புறம் எனக்காக ஏன்.... இப்படி பொய்...!!
♥கண்ணீர் வர விடமா பாத்துக்கறத விட
நீங்க என்னை மனசு பாதிக்கபடமா பாத்துக்கிட்டாலே போதும்... கண்ணீருக்கும் கவலைக்கும் இடமே இல்ல.....! ஏன்னா மனசு பாதிக்கப்பட்டா.. அப்புறம் சரிப்படுத்த முடியாது...
♥எனக்கு எல்லாம் வாங்கி தர வேண்டாம்
நமக்கு தேவையானத மட்டும் வாங்கி குடுத்தா போதும். இனி எனக்கென்று தேவை குறைவு நமக்கான தேவை தான் அதிகம்.
♥ஒரு குடும்பத்துல வர்ற முதல் பிரச்சனை
ஆடம்பரமான பொருள் வாங்கி
கடன்ல சிக்குறது தான்..
அது என்னால உங்களுக்கு எப்பவுமே வேண்டாம்....! விரலுக்கு ஏத்த மாதிரி வாழ்வோம்.... நீங்க கடன் காரர் ஆகி உங்க நின்மதி போய் அதால என் நின்மதியும் போய்..குடும்பமே நின்மதி இன்றி போய்விடும்.
♥எனக்கான மரியாதை என்னை மதிக்கறதுல இல்லங்க
மத்தவங்ககிட்ட என்னை நீங்க விட்டுகொடுக்காம இருந்தாலே போதும்....! எனக்கான மரியாதை என் நடத்தையிலும் இருக்கு அதை நான் சரியா செய்வேன்.
♥வாழ்க்கையில கஷ்டம் அப்படிங்குறத தெரிஞ்சாத்தான் அதுல வர்ற சந்தோசம் அழகாதெரியும்....!
♥நான் சரியா பேசி நடந்தா என் கைபிடிச்சு
கூடவே வாங்க ...தவறா பேசி நடந்தா இது தப்பு அப்படினு சரியா புரிய வைங்க. என் வாழ்க்கை துணை நீங்க... நீங்கதான் எனக்கு துணை.
♥மனைவி ஆகிய நான் உங்களுக்கான இந்த சமுதாயத்துல ஒரு அடையாளம்
அதை சரியா பாத்துக்கறது என்பது
அவள் சரி தவறுகளே மனசு காயப்படாம
எடுத்து சரி பண்றதுதான்
இது உங்களுக்கு மட்டும் இல்ல
எனக்கும்தான்......!!!
♥கணவன் மனைவி உறவு
காமம் சந்தோசம் அதை தாண்டி அவங்களுகுள்ள விட்டுதரனும் ஆனா மத்தவங்ககிட்ட விட்டுதரவே கூடாது
இது..அவங்களுக்கான உலகம்.....!
♥கணவன்::! இனி இந்த உலகத்துல
நீ என்ன எதிர்பார்க்குறியோ
அதுஎப்பவுமே உனக்கு கிடைக்கும்
என் மனசாரா..........! நீ எனக்கு கிடைத்தது வரமே.........
0 Comments
Thank you