HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கிச்சன் டிப்ஸ்

♥கிச்சன் டிப்ஸ்

♥மோர்க்குழம்பு செய்யும்போது மிளகாய் வற்றலை வறுத்து அரைத்து சேர்க்கவும். அவ்வாறு செய்தால் குழம்பு வெள்ளையாக இருக்கும்.

♥வெங்காயப் பக்கோடா கமகமவென்று இருக்க வேண்டுமா? பக்கோடா செய்யும்போது பாதி வெங்காயத்தையும் இஞ்சியையும் மிக்ஸியில் விழுதாய் அரைத்து எடுத்து அதை மாவில் கலந்து பக்கோடா செய்யுங்கள். படு பிரமாதமாய் இருக்கும்.

♥டபுள் பீன்ஸை உப்பு சேர்த்து வேக வைத்து வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக்கொண்டு பஜ்ஜி மாவு, போண்டா மாவு மற்றும் பக்கோடா மாவில் கலந்து பக்கோடாவாக செய்யலாம். மாறுதலான சுவையுடன் நன்றாக இருக்கும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

♥பாயசத்திற்கு பால் குறைவாக இருந்தால் ஹார்லிக்ஸ், வீவா போன்றவற்றைக் கரைத்துவிட பாயசம் மிகவும் சுவையாக இருக்கும்.

♥பலகாரங்கள் செய்யும்போது எண்ணெய் பொங்காமலிருக்க இரண்டு சொட்டு வினிகர் விட்டால் போதும். அதன்பிறகு அது பொங்காது.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

♥கூட்டு, குருமா செய்யும்போது அத்துடன் ஒரு கைப்பிடி முளை கட்டிய பயிரைச் சேர்த்துச் சமைக்கவும். சுவையும் கூடும். புரதச்சத்தும் பல மடங்கு அதிகமாகக் கிடைக்கும்.

♥அப்பளம், வடாம் போன்றவற்றை வறுத்தவுடன் சூட்டோடு மூடிவிடக் கூடாது. நமுத்துப்போய் விடும். ஆறிய பிறகு மூடி வைத்தால் மொர மொரப்புடன் இருக்கும்.

♥இட்லி மாவை மிக்ஸியில் அரைக்கும் போது, ஐஸ் வாட்டர் சேர்த்து அரையுங்கள். சீக்கிரம் புளித்து போகாமல் இருக்கும்.
- அமுதா அசோக்ராஜா, திருச்சி.

♥பொடி சேர்த்து செய்யும் கத்தரிக்காய் கறிபோல் குடை மிளகாயையும் பொடி சேர்த்து செய்ய மணமும், சுவையும் அருமையாக இருக்கும்.

♥பஜ்ஜி செய்யும்போது ஒரு மாறுதலுக்காக பிஸ்கெட்டைத் தோய்த்துச் செய்தால் மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.

♥முளைக்கீரைத் தண்டுகளை பொடியாக நறுக்கி பொரியல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். ஊளைச்சதையையும் குறைக்கும்.
- கே.ஆர்.உதயகுமார், சென்னை.

♥தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால், அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெயில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
- கே.முத்துலட்சுமி, ராமநாதபுரம்.

♥சாமை அரிசி வடித்த கஞ்சியில் ரசம் வைத்தால் சுவையாக இருக்கும். சாமை அரிசியில் கேசரி செய்தாலும் சாப்பிட சுவையாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும்.

♥அவரைப்பருப்பை வேக வைத்து அதில் முருங்கைக்காய் போட்டு சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
- சு.கண்ணகி, வேலூர்.

கேக் செய்யும் போது இதை பின்பற்றலாம்!

♥கேக் ‘பேக்’ செய்யும் ஓவனின் சூடு மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். கேக் ‘பேக்’ செய்வதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பே ஓவனை சூடாக்கிவிட வேண்டும்.

♥கேக் ‘பேக்’ செய்யும் டின்னில் இரண்டடுக்கு பிரவுன் பேப்பரை அளவுக்கு தக்கபடி வெட்டி எடுத்து வெண்ணெய் பூசி வைக்க வேண்டும். டின்னின் முக்கால் பகுதி அளவுக்கே கேக் கலவையை ஊற்ற வேண்டும்.

♥கேக் ‘பேக்’ செய்யும் போது ஓவனைத் திறந்து மூடக் கூடாது. திறந்து மூடினால் கேக்கின் மென்மைத்தன்மை பாதிக்கப்படும்.

♥‘கேக்’கில் சேர்க்கும் வெண்ணெயில் உப்பு சேர்க்கக் கூடாது. அப்படி உப்புச் சேர்க்கப்பட்ட வெண்ணை பயன்படுத்தினால் கேக் மாவில் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

♥ஃபுரூட் கேக் தயாரிக்கும்போது பழங்களின் விதைகளை நீக்கி விட்டு சிறிதாக நறுக்கி கேக்கின் மேல் பாலில் முக்கி பதிக்க
வேண்டும்.

♥முட்டை சேர்க்காமலே சுவையான கேக் செய்ய வேண்டுமானால் ஒரு கப் மைதா மாவிற்கு ஒரு ஆரஞ்சு பழச்சாறு என்ற
கணக்கில் சேர்க்க வேண்டும்.

♥கேக் அதிக மென்மையாக இருக்க வேண்டுமானால் அதில் சிறிதளவு தேன் சேருங்கள்.

♥கேக் மேலே கலர் தேங்காய் துருவல், கேரட் துருவல், வெள்ளரி துருவல் என வித்தியாசமாகத் தூவி செய்யலாம்.

♥கேக் மேலே முந்திரி, பாதாம், கற்கண்டு போன்றவற்றை தேனில் முக்கி பதித்துவிட்டால் நன்றாகவும், சுவையாகவும் இருக்கும்.

♥கேக் செய்யும்போது கருகாமல் இருக்க சூடு பண்ணும் நேரத்தை சரியாக கணக்கிட்டு வைக்க வேண்டும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

Post a Comment

0 Comments