♥கடவுளுக்கு வாழைப்பழம் வைத்து படைப்பது ஏன்?
♥முக்கனிகளான மா, பலா, வாழை இவற்றில் வாழைக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு.
♥ மா, பலா என்று இல்லை, இயற்கையாக விளைந்த எல்லா வகையான பழங்களிலுமே கொட்டை இருக்கும். அப்படி கொட்டை இல்லாத பழம் உண்டென்றால் அது மரபணு மாற்றப்பட்டதாகத்தான் இருக்கும்.
♥ஆனால், இயற்கையாக விளையும் பழமான வாழைப்பழத்தில் கொட்டை என்பதே இல்லை. மாறாக அதில் சிறு கருப்பு விதைகள்தான் இருக்கும்.
♥ எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் பூஜையில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் வைத்து படைக்கிறார்கள்.
♥ மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.
♥ இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டுதலை முன்னிறுத்தி நாம் கடவுளுக்கு வாழைப்பழத்தை படைக்கிறோம்.
♥ அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.
♥ அது மட்டுமல்ல தேங்காய் மற்றும் வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.
♥ மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.
♥அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.
♥ இதனால் தான் கடவுளை வணங்கும்போது வாழைப்பழத்தை வைத்து வணங்குகிறோம்.
0 Comments
Thank you