♥காதலர் தின வரலாறு
♥கி.பி.207 ஆம் ஆண்டில் ரோம் நாட்டை ஆண்ட இரண்டாம் கிளாடியஸ் மன்னன், தனது படைவீரர்களுக்கு முட்டாள் தனமாக உத்தரவு ஒன்றை பிறப்பிப்பானாம்.
இந்த அரசனின் நடவடிக்கையால் படையில் சேர பலர் தயங்கினர்.
♥போர் வீரர்கள் பிரம்மச்சாரிகளாக இருந்தால் சலனங்கள் எதுவும் இல்லாமல் முழு ஆவேசத்துடன் போர் புரிவார்கள் என அவர் கருதினான்.
திடீரென ஒருநாள் ‘ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது, படையில் சேரும் இளைஞர்களுக்கு ‘திருமணம் ஆகியிருக்கக் கூடாது காதலிக்கக்கூடாது என சட்டமியற்றினான்.
இதை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்டித்து கொல்லப்படுவார்கள்’’ என உத்தரவிடுமாறு தனது அமைச்சருக்கு அறிவித்தான்.
♥திருமணமானவர்கள் மனைவியை பிரிந்து வரத் தயங்குகிறார்கள். காதலிக்கும் இளைஞர்கள் காதலியை பிரிந்து வர தயங்குகின்றனர். இவை இரண்டும் இல்லாவிட்டால் படையில் சேர்வார்கள் என்று இரண்டாம் கிளாடியஸ் மன்னன் எண்ணினான். மன்னனின் அறிவிப்பைக் கேட்ட ரோமானியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், புனித
பாதிரியார் வலன்டைன் என்பவர் அரசனின் இந்த அறிவிப்பை மீறி காதல் ஜோடிகளுக்கு இரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார்.
இதையறிந்த மன்னன் பாதிரியார் வலன்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.
♥இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார் வலன்டைன், அச்சிறையின் தலைமைக் காவலர் அஸ்டோரியஸின் பார்வை இழந்த மகள் ஜூலியாவை குணப்படுத்தினார்.
இதை அறிந்த மன்னன் சிறைத் துறைத் தலைவனை வீட்டுச் சிறையில் வைத்தான்.
ஆனாலும் வலன்டைனை விடுவிக்க அஸ்டோரியஸின் மகள் முயன்றாள்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட மன்னன் கிளாடியஸ் கோபம் கொண்டு பாதிரியார் வலன்டைனின் தலையைச் சீவும்படி ஆணையிட்டான்.
♥கி.பி.207 பெப்ரவரி 14 ஆம் திகதி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் நினைவாகக் கொண்டாடப்படுவதுதான் ‘வலன்டைன்ஸ் டே (Valentine’s Day) எனும் காதலர் தினம்
0 Comments
Thank you