💓பொறுமையாக படியுங்கள்💓
💓இது ஆபாசமல்ல
என் ஆதங்கம் அத்தனையே
💓கழிவறை சுவர்களில்
நிர்வாணமாக வரைந்து
வைத்திருந்தான் அவளது
மார்பகங்களை அவன்
💓பெண்களின் நிர்வாண படத்தை பார்த்து மகிழ்ந்திருந்தான்
மற்றொருவன்
💓பேருந்து நிலைய நிழற்குடையில் அவளது பெயரெழுதி அவளை
அனுபவிக்க ஓர் இரவிற்கு இத்தனை ரூபாய் என குறிப்பிட்டு அதற்கான எண்களையும் எழுதி வைத்திருந்தான்
யாரோ ஒருவன்
💓மதிகெட்டோரே கேளுங்கள்
💓யோனியென்பது காமத்தின்
வாசலல்ல,
மார்பகம்யென்பது கவர்ச்சியின்
விளம்பரமல்ல,
பெண் என்பவள்
போதையுமல்ல,
💓தாய்க்கு உள்ளதே
தமக்கைக்கும்,
தமக்கைக்கு உள்ளதே
தாரத்திற்கும்,
தாரத்திற்கு உள்ளதே,
பெண்கள் யாவர்க்கும்
💓அம்மாக்களின் மார்புப்பாலில்
காமம் கலப்பதிலை
💓தமக்கைகளின் ஆடைவிலகளில்
ஆபாசம் தட்டுபடுவதில்லை
💓தாரங்களின் அரவணைப்பில்
தாய்மை குறைவதில்லை
💓பெருத்த தொடை இரண்டுக்கு நடுவில்
வயிற்றின் அடிப்பகுதியில்
அமைந்திருக்கும்
எலும்பின் சதைமூடிய
யோனியின் வழியே கருவுற்று
உருபெற்று உயிர் பெற்று
ஒரு பெரு வலியோடு
வெளியேறிவர்கள் தானே
நாம் என்பதை மறந்து போய்
மதி இழந்து போய் வாழ்ந்து வருகிறோம்
💓புரிந்து கொள்ளுங்கள்
💓பெண்கள் யாவரும்
காமத்தின் அடையாளமல்ல
அவர்கள்
போதைகளின் புகலிடமும் அல்ல
இச்சைக்கு இன்னொரு பெயர்
பெண்கள் என்று எண்ணாதீர்கள்
💓ஏனெனில் அவர்கள்
நம்மில் பாதி ...
0 Comments
Thank you