நெருக்கடியான காலகட்டங்களில் எளிய மக்கள் செய்யும் அர்ப்பணிப்புகள் சாதாரணமில்லை. நிறைய நேரங்களில் அது வெளியே தெரிவதும் இல்லை. ஒரு உயிர்கொல்லி தொற்றுநோய் வருது, எல்லோரும் ஓடி ஒளிஞ்சுகோங்கன்னு அரசாங்கமே சொல்லும் போதும், நம்மால் ஏதும் செய்ய முடியாதான்னு பொதுசேவைக்கு வருபவர்களை உற்றுநோக்கினால் மிக சாதாரண மனிதர்களாகவே இருப்பார்கள்.
நாம் செய்யும் வேலைக்கு சம்பளம் தராங்க. வேற வழியே இல்லை இதை செய்யணுமே என்று நினைப்பவர்கள் இதுபோன்ற அசாதாரண சூழலில் வேலைக்கே வரமாட்டார்கள். சேவைமனப்பான்மை மரபணுவில் ஊறிப்போய் இருப்பவர்களே எந்த தொற்றுநோய்க்கும் பயப்படுவதில்லை! தொழுநோயாளிகளை கண்டு விலகி ஓடியவர்கள் மத்தியில், ஒருத்தி மட்டும் தன்னால் முடிந்தவரை தொட்டு தூக்கி வைத்தியத்திற்கு அனுப்பினாள். அதனால் தான் வெறும் தெரேசா அன்னை தெரேசாவாக உருவெடுத்தாள்!
முன்பின் தெரியாத எவரோ தொடப் போகும் கம்பியில் வைரஸை தேடித்தேடி அழிக்கற அர்பணிப்புடன் கூடிய சேவை உணர்வு இருக்கே! அது தான் கடவுள்! அப்புறம் விஜய்சேதுபதி சொன்னது போல், நம்மை காப்பாத்தணும்னு நினைக்கறதுக்கு கடவுளாக இருக்க வேண்டிய அவசியமில்லை.சக மனுஷியாகவோ, மனுஷனாக இருந்தால் போதும்.
0 Comments
Thank you