உங்கள் காதலியானாலும் சரி,
மனைவியானாலும் சரி,
ஒரு குழந்தை போல பாருங்கள்,
அப்போதுதான்
அவர்கள் செய்யும் தவறுகள் ஒன்றும் பெரியதாக தெரியாது.
வேடிக்கையாக மட்டும் தெரியும்,
அதை பார்த்து சிரிக்க தோன்றும்.
ஒருபோதும் அவர்களின் தவறுகளை மற்றவர்கள் முன்பு சுட்டிக் காட்டாதீர்கள்.
தவறு செய்ய அனுமதியுங்கள்.
காதலித்த நாட்களை விட காதல் திருமணத்திற்கு பின்னர்தான் ஒரு பெண், அவள் காதலனிடம் இருந்து முழுமையான அன்பையும், பாதுகாப்பையும், எதிர் பார்க்கிறாள்.
சில ஆண்கள் அந்த உணர்வுகளை புரிந்து அதற்கேற்றபடி நடப்பதால் திருமணத்திற்கு பிறகும் அவர்கள் காதலர்களாக இருக்கிறார்கள்.
சில ஆண்கள் அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் போகும் போது அவள் மிகப் பெரிய ஏமாற்றம் அடைகிறாள். அங்கே கோபம் வருகிறது..
" ஒரு தனி மனிதன் அல்லது இனத்தின் உரிமைகள், உணர்வுகள் மறுக்கப் பட்டாலும் சரி அதற்கு மதிப்பளிக்காவிட்டாலும், அங்கே கோபம் வருவது இயற்கைதான்.
உரிமைகள் உள்ள இடத்தில் கோபம் கொட்டப்படும்.
உரிமைகள் இல்லாத இடத்தில் வெறும்
ஏக்கமும், எதிர்பார்ப்புமே இருக்கும்.
ஆதலால் உங்கள் காதலியை புரிந்து கொள்ளுங்கள்.
அவர்கள் உங்கள் மீது கோபம் கொண்டால் பெரிது படுத்தாதீர்கள்,
அந்த கோபம் அவள் உங்களது மீது கொண்டிருக்கும் உரிமை.
உரிமை உள்ள உங்கள் மீது கேப படாமல் வேறு ஒருவன் மீது கோப பட முடியுமா ?
காதல் புனிதமான ஒன்று
சிறு சிறு காரணங்களால்
ஒரு காதல் பிரிவது மிகவும் மன வேதனையை அளிக்கிறது.
0 Comments
Thank you