உலகத்திலியே மிக மோசமான கொடிய நிகழ்வு என்ன தெரியுமா ..
தன் கணவனுக்கு இன்னொரு மனைவி இருப்பது தெரியவருவது...
துரோகத்தின் வாசலை முதன் முதலில் தொட்டு விட்டு வரும் அந்த கொடிய நேரம் தான் எத்தனை ரணமானது...
தனக்கு மட்டுமே சொந்தமான உடல்,
தான் மட்டுமே படுத்துறங்கிய மடி,
தன்னை மட்டுமே தாங்கிய தோள்கள் ,
தான் அள்ளி அணைத்த நெஞ்சு,
தன்னை மட்டுமே காதலுடன் பார்த்த கண்கள்,
எல்லாமே இன்று தனக்கானது இல்லை என்று தெரிய வரும் அந்த நொடி எத்தனை அபாயகரமானது..
தனக்கே தனக்கு என்று இருந்த ஓருயிர்
இன்னொரு உயிருடன் சேர்ந்து விட்டதை எண்ணி எண்ணி அழவும் முடியாமல்
அழாமல் இருக்கவும் முடியாமல் நகர்த்துகிற அந்த இரவுகள் எவ்வளவு வலிமையானவை
கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து அப்படி என்ன இல்லை என்னிடம் ..
எதற்காக என்னை விட்டு செல்ல துணிந்தது
அவளிடம் ...
என்னிடம் திருப்தி இல்லாதது அவளிடம் என்ன திருப்தி அடைந்தாய்....
என சட்டையை பிடித்து உலுக்கி கேட்க தோன்றுகிறது உன்னிடம்...
அந்த நேரத்தில் கூட உன் உடலை தொட என் மனம் கூசுவே செய்கிறது...
துரோகம் வலிக்கும் என உனக்கு தெரியாதா
துரோகத்தின் வலி உயிரை ரெண்டாக கிழிக்கும் என் நீ அறியாததா
துரோகம் அவமானம் இழி சொல் ஒதுக்கப்படுதல் இவற்றிற்கு பிறகும்
வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல் என நம்புகிறேன்
பல நீண்ட நெடிய இரவுகள்
தூக்கத்தை தொலைத்த இரவுகள்
அடி உதை வாங்கிய இரவுகள்
துரோகம் தாங்கிய இரவுகள்
காதலை மறைத்த இரவுகள்
இதயத்தை பிழிந்த இரவுகள்
அத்தனை இரவுகளும்
ஒரு நாள் விடியும்
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்
நம்பிக்கை துரோகம் அவ்வளவு
வீரியமிக்கது...
அதை நம்மை நம்பும் பெண்ணிடம்
தயவுசெய்து தந்து பெண்பாவத்தை சம்பாதித்து விடாதீர்
காலம் முழுக்க நம்மை விடாது...
இருபாலாருக்கும் பொருந்தும்
துரோகம் சுடும்.
0 Comments
Thank you