அன்பே
முப்பொழுதும் உன் காதல் வேண்டாம்
முழுவதும் உன் கற்பனை வேண்டும்,
காமம் என்ற பெயரில்
கட்டிப் பிடிக்க வேண்டாம்
கண்கள் என்ற பெயரில்
காட்சியாக வாழ்ந்தால் போதும்,
விரல்கள் உறசிக் கொள்ள வேண்டாம்
விழிகள் பேசிக்கொண்டாலே
போதும்,
நெருக்கங்கள் எப்போதும்
வேண்டாம்
நெஞ்சம் தேடி வந்தால் போதும்,
கொஞ்சிப் பேசும் வார்த்தைகள்
தேவையில்லை!
சில நேரம் நான் இரசிக்கும்
மௌனங்கள் போதும்,
அதிகமான வார்த்தைகள் வேண்டாம்
அளவான மௌனங்கள் போதும்,
மரங்கள் மத்தியில்
மறையும் இரசியங்கள் வேண்டாம்!
மயங்கி பார்க்கும்
இரசனைகள் வேண்டும்!!,
தொட்டுப் பேசும் அளவில்
நீ வேண்டாம்
தொலைவில் இருந்து பார்க்கும் அளவில்
நான் வேண்டும்,
மூச்சுக் காற்றினை பறிக்கும்
முத்தங்கள் வேண்டாம்
முகவரி அறியும்
சத்தங்கள் போதும்,
நீயும் நானும் மடிமீது சாய வேண்டாம்
மனதோடு மனம்
சங்கமித்தால் போதும்,
தேடி வந்து பார்க்கும்
அவசியம் வேண்டாம்
நிலவாக நினைவுகள்
தேயாமல் இருந்தால் போதும்,
எப்போதும் பார்க்கும்
பெரும் பார்வை தேவையில்லை
எப்போதாவது பார்க்கும்
சிறு பார்வை போதும்,
கன்னங்களில் கைகளாக இருக்க
வேண்டாம்
எண்ணங்களில் ரேகையாக இருந்தால்
போதும்,
அலைபேசியில் அழைக்க வேண்டிய
அவசியம் தேவையில்லை!
அலைகடலென ஆசைகள் இருந்தால்
போதும்
இடைவெளிகள் எப்போதும்
வேண்டும்
அப்போதும் இதயமாக நீயே
இருக்க வேண்டும்,
உறவுகள் என்னவென்று
உறவுகளுக்கு காட்ட வேண்டாம்!
உணர்வுகள் என்னவென்று
உள்ளம் தெரிந்து கொண்டால் போதும்!!,
காதலர்கள் என்று பிறர் யாரும்
அழைக்க வேண்டாம்!
காவியம் என்று படைத்தாலே போதும்!!
உயிரே
நம் காதலை...!
0 Comments
Thank you