#பெண்களுக்குத்தானா #இணையம் பாவித்தலின் அட்வைஸ் ? ஆண்களுக்கு இல்லையா?
நிச்சயம். ஆண்களுக்கும் உண்டு சகோதரி.. ஏன் பெண்கள் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறார்கள் எனில்
#ஆண்களில் நல்ல மனம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்களை வளைப்பதற்கென்றே ஒரு சாரார் வட்சப் குரூப்களோடும் பேஸ்புக் குரூப்களோடும் சுற்றித் திரிகிறார்கள்.
.
#எந்த ஆண் ஐடிகளைச் சுற்றி பத்துப் பெண்கள் மொய்ப்பது கிடையாது. ஆனால் ஒரு பெண் ஐடியைச் சுற்றி பத்து ஆண்கள் மொய்ப்பார்கள்.
.
#ஒரு பெண் உச்சக்கட்ட மொக்கை பதிவிட்டால் நூற்றி ஐம்பது ரிப்ளைகள் . நல்லாயிருக்கே என்பதற்கல்ல. அது எதிர்ப் பாலினம் மீதான கவர்ச்சி. ஆனால் ஒரு ஆண் எனில் தலை கீழ்.
.
#ஒரு பெண் வேறொருவரின் பதிவுக்கு கொமென்ட் போட்டாலே போதும். . பத்து ரெக்குவஸ்டுகள் உடனே ஓடி வரும்.
.
#பெரும்பாலும் பெண் ஐடிகள் ஆணை வளைப்பதற்காக இன்பொக்ஸ் வருவதில்லை. ஆனால் ஒரு பெண்ணை வளைப்பதற்காக பலர் இரைந்து வருவார்கள் இன்பொக்ஸில்.
.
#ஒரு ஆணின் போன் நம்பர் பகிரப்பட்டால் அது பலருக்கு பகிரப்படுவது சாத்தியங்கள் இல்லை. ஆனால் ஒரு ஆணுக்கு பெண்ணின் நம்பர் சென்றால் அவன் மோசமானவனாக இருந்தால் நம்பர் பகிரப்படும் சம்பவங்கள் நிறைய நிறைய.
சில வேளைகளில் அருவருப்பான குறிப்புப் பெயர்களோடு தான் அந்த நம்பர்கள் பகிரப்படுகின்றன.
.
#ஒரு ஆணின் மானம் பறிக்கப்பட்டால் அது பிறருக்கு சென்றடையும் சாத்தியங்களை விட ஒரு பெண்ணின் மானம் பறிக்கப்பட்டால் அது ரீச் ஆவும் வேகம் நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.
.
#படைப்புகளை ரசிப்பதற்காக பேஸ்புக் வந்தோரும் உண்டு.. பெண் என்ற படைப்பை ரசிப்பதற்காக பேஸ்புக் வந்தோரும் உண்டு. பல பேக் ஐடிகள் திறந்து அதுக்காக என்றே சுற்றுகிறார்கள் .
.
ஒவ்வொரு பெண்களும் நிச்சயம் அனுபவப்பட்டிருப்பார்கள் . அங்கே பதில்கள் சொல்லப்படாத பல ஹாய் சிஸ்டர்கள் உண்டு. பல மிஸ்ட் கோல்கள் உண்டு. சங்கடப்பட்ட சம்பவங்கள் உண்டு.
.
பேஸ்புக்குகளில் நடக்கும் சம்பவங்களுக்காக பரிதாபப்பட்டுத் தான் சொல்கிறேன் ஒழிய நான் ஒன்றும் போதகரோ நீங்கள் ஒன்றும் பொல்லாதவர்களோ அல்ல.
எல்லாமே முன் எச்சரிக்கைகளும் விழிப்புணர்வும் தற்காப்பும் தான்.
.
குறிப்பு- ஆண்களை வளைக்கும் பெண்களே! இந்தப் பதிவு உங்களுக்கல்ல.
0 Comments
Thank you