♥#சிறந்த_வரிகள் !!
♥பணத்தின் மிகப்பெரிய பயன், அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வதுதான்!
♥சாதனை படைக்கப் பிறந்தவர்கள் ஜாதகம் பார்ப்பதில்லை!
♥ஊக்குவிக்க ஆள் இருந்தால், இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பான்.
♥திறமையானவர்கள் சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதில்லை, அவர்களே சந்தர்ப்பத்தை உருவாக்குகிறார்கள்.
♥ஒரு முயற்சி நிறுத்தப்படும்போது தோல்வியாகிறது, அதுவே தொடரப்படும்போது வெற்றியாகிறது.
♥நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் பின்னால், நம்மை அறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும், மூலகாரணமாகவும் இருக்கிறார்.
♥தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும், கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்!
♥பிறரை சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.
♥விதியை நம்புபவன் எதையும் சாதிக்க மாட்டான்.
0 Comments
Thank you