HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சுத்தியால ஒரே ஒரு அடிதான் அதற்கு இவ்வளவு கூலியா???

♥சுத்தியால ஒரே ஒரு அடிதான் அதற்கு இவ்வளவு கூலியா???

புத்திசாலித்தனம் - குட்டிக் கதை...!!

♥ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார். அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகிவிட்டது. ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக்குகளை எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார். ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது? என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

♥ஒரு வயதான மெக்கானிக், தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார். சரி என்று அவரும் ஒப்புக்கொண்டார். மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்களை எல்லாம் வைத்திருந்தார். கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்துவிட்டது.

♥அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார். பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார். இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார். அதுவும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

♥கப்பல் வியாபாரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

♥அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான். அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார். 
அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது. அவர் அந்த பையனிடம் தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

♥அடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் அந்த பையன் வந்திருந்தான். அதில்,

♥1. சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய்.

♥2. எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய் என்று எழுதி இருந்தது.

♥மண்டையில மூளை இருந்தா மட்டும் போதாதுங்க... அதை எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கணும்...🤗😌

Post a Comment

0 Comments