♥பெண்ணின் மானம் காத்த, வேட்டி!
♥திருச்சியில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு செல்ல, உடமைகளுடன் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தேன். அன்று, முகூர்த்த நாளானதால், பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது.
♥என் அருகில், சுடிதார் அணிந்த, நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர், தன், ஆறு வயது மகளுடன் பஸ்சுக்காக காத்திருந்தார். பஸ் வரவே, அனைவரும் முண்டியடித்து ஏறினர்.
அந்த பெண் இறுக்கமான, 'லெகின்ஸ்' அணிந்திருந்தபடியால், உயரமான படிக்கட்டில் காலை துாக்கி ஏற முடியாமல் அவதிப்பட்டார்.
♥பின்னால் நின்றிருந்தோர், 'ஏற முடிந்தால் ஏறுங்கள்... இல்லையெனில், எங்களுக்கு வழி விடுங்கள்...' என, குரல் கொடுத்தனர்.
அந்த பெண், மீண்டும் முயற்சித்தபோது, இறுக்கமாக உடுத்தியிருந்த, 'லெகின்ஸ்' கிழிந்து அங்கம் தெரிய, அவமானத்தால் குறுகினார்.
♥என்ன செய்வதென்று தெரியாமல் அவதிபட்ட பெண்ணுக்கு, சட்டென்று என் பையிலிருந்து, ஒரு வேட்டியை எடுத்துக் கொடுத்தேன். 'ஆபத்துக்கு பாவமில்லை... முதலில் மானத்தை காப்பாத்துங்கள்...' என கூறியதும், தயங்கியபடியே, வேட்டியை வாங்கி, இடுப்பில் கட்டிக் கொண்டார்.
♥பெரும்பாலும் இளம் பெண்கள் தான், 'லெகின்ஸ்' எனப்படும் இறுக்கமான உடை அணிவர். ஆனால், திருமணமாகி, குழந்தை பெற்ற, உடல் பெருத்த குடும்ப பெண்களும், இதுபோன்ற இறுக்கமான உடைகளை ஏன் தான் அணிகின்றனரோ!
இனியாவது, வயது, உடலுக்கேற்ற உடைகளை அணிவரா... இல்லாவிட்டால், பொது இடத்தில் மானம் போவது நிச்சயம்!
0 Comments
Thank you