#மனைவி_கர்ப்பமாக இருக்கும் போது #கணவன்_கட்டாயம் செய்ய வேண்டியவை..!
💜💘🌹💝💗
#கருத்தரிப்பது வரை தான் #ஆண்களின் வேலை, பிறகு #பெற்றெடுத்து வளர்ப்பது எல்லாம் #பெண்களின் வேலை என துளியளவும் #கருதிவிடக் கூடாது.
#பதி என்பவன் கடைசி வரை தன் #மனைவியை_பாதுகாப்பாக வைத்துக் கொள்பவனாக இருக்க வேண்டும். முக்கியமாக #கர்ப்பக் காலத்தில்.
கர்ப்பிணி பெண்கள் இந்த காலத்தில் தனது #தாய் மற்றும் #கணவனை மிகவும் எதிர்பார்ப்பார்கள்.
அதிலும் கணவனின் இணைப்பு மிகவும் அவசியமானது. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது ஆண்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை என சிலவன இருக்கின்றன. அவற்றை சரியாக செய்ய வேண்டியது #கணவனின்_கடமையாகும்.
#இரவு
சாதாரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு இரவு படுத்தவுடன் உறக்கம் வராது.
சற்று அசௌகரியமாக தான் உணர்வார்கள். எனவே, இரவு அவர்கள் உறங்கும் வரை அவர்களை அரவணைப்புடன் பார்த்துக் கொள்ளுங்கள், ஏதேனும், பேசுங்கள். இது அவர்களது #உடலும், #மனதும்_இதமாய் உணர உதவும்.
#மசாஜ்
அதே போல, தினமும் அவர்கள் அசௌகரியமாக உணரும் போது நீங்களாக அவர்களது கை, கால்கள், இடுப்பு, தோள்பட்டை பகுதிகளில் மசாஜ் போன்று செய்துவிடுங்கள். இதனால் அவர்களுக்கு இரவு நல்ல #உறக்கமும் கூட கிடைக்கும்.
#உறுதுணை
மருத்துவரிடம் மாதாமாதம் பரிசோதனைக்கு செல்லும் போது கண்டிப்பாக உடன் செல்ல வேண்டும். இது அவர்களை பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ளவும், உங்களுக்கு இருக்கும் #சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டு தீர்த்துக் கொள்ளவும் சரியாக இருக்கும்.
#ஊக்கம்
கண்டிப்பாக வளைகாப்பு நடந்தவுடன் ஒவ்வொரு நாளும், பெண்களுக்கு பிரசவத்தை பற்றிய எண்ணம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இந்த நேரத்தில் அவர்களுக்குள் #அச்சமும் சற்று அதிகரிக்கும். எனவே, அவர்களிடம் அமர்ந்து ஊக்கம் அளித்து, நேர்மறையாக கொஞ்சம் பேசுங்கள். இது அவர்களுக்கு #தைரியத்தை அளிக்கும்.
#பிடித்தவை
உணவு, உடை, உபகரணங்கள் என கர்ப்பிணி பெண்களுக்கு பிடித்தவற்றை மறவாமல் வாங்கி தர வேண்டும். அதே போல அவர்களுக்கு பிடிக்காத செயல்களில் ஈடுபட வேண்டாம். கர்ப்பிணி பெண்களின் உடல்நலத்திற்கு இணையாக #மனநலமும் சரியாக பேணிக்காக்க வேண்டும்.
இது #தாய்_சேய் இருவரது ஆரோக்கியத்திற்கும் அவசியமானது.
#உரக்க_பேசுதல்
கர்ப்பிணி பெண்கள் முன் உரக்க சத்தமாக பேசவேண்டாம். ஏன், டிவி, இசை போன்ற இதர சத்தங்கள் கூட குறைவாக வைத்துக் கொள்ளுங்கள். இது, அவர்களது மனநிலையை பாதிக்க கூடும்.
#வாக்கிங்
கர்ப்பிணி பெண்கள் நடைபயிற்சி செய்தல் நல்லது என மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால், கணவனுடன் செல்வது அவர்களது மனதிற்கும் நல்லது. இவையெல்லாம் கர்ப்பிணி பெண்களை மகிழ்ச்சியடைய வைக்கும் செயல்கள் ஆகும்.
#தனிமை
எக்காரணம் கொண்டும் கர்ப்பிணி பெண்களை #தனிமையாக உணர வைத்துவிட வேண்டாம். இது அவர்களது உடல்நலத்தை வெகுவாக பாதிக்கும் செயலாகும்.
பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் தனது தாய் மற்றும் கணவனை தான் எதிர்பார்ப்பார்கள்.
கணவனுடைய இணைப்பு மிகவும் இன்றியமையாதது..
0 Comments
Thank you