♥காதலர்கள் அணியும் உடையின் காதலர் தின இரகசியம்.
♥ஒவ்வொரு உடை அணிவதற்கும் ஒவ்வொரு காரணம் உள்ளதாம். என்னமா கண்டுபிடிக்கிறாங்க...? அதையும்தா பாத்துடுவோமே....
♥#பச்சை நிற உடை- எனக்கு விருப்பம் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்
♥#ரோஸ் நிற உடை- இப்பதான் காதலை ஏற்றேன்
♥#நீல நிற உடை- இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன்
♥#மஞ்சள் நிற உடை- காதல் தோல்வியடைந்தேன்
♥#கறுப்பு நிற உடை – காதல் நிராகரிக்கப்பட்டது
♥#ஆரஞ்சு நிற உடை- நிச்சயதார்த்தம் செய்ய ரெடி
♥#சிவப்பு நிற உடை- என்னை விட்டுவிடுங்கள்
♥#கிரே கலர் உடை- காதலில் இன்ரெஸ்ட் இல்லை
♥#வெள்ளை நிற உடை- ஏற்கனவே காதலிக்கிறேன்
♥#பச்சை நிற உடை அணிந்தவர்களின் குணம்:
பச்சை வண்ண உடையை விரும்புபவர்களிடம் எளிதில் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய இயலாது. இவர்கள் அதிகம் பேச மாட்டார்கள். காதலை வெளிப்படையாக கூறமாட்டார்கள், காதல் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் இதிலிருந்து பெண்கள் வேறுபடுவார்கள். இவர்களுக்கு காதல் உணர்வுகள் அதிகமானதாக இருக்கும். காலம் முழுக்க காதலித்துக் கொண்டு இருக்கவேண்டும் என நினைப்பர்.
♥#ரோஸ்நிறம்:
ரோஸ் நிறத்தை விரும்புபவர்கள் காதல் கனவுகள் நிறைய காண்பவராக இருப்பார்கள். தினமும் சிலரிடமிருந்து காதல் அழைப்பு வந்துகொண்டே இருக்கும். காதலை அனுபவித்து உணர்வார்கள்.
♥#நீலநிற_உடை:
இவர்களின் காதல் ஆராய்ந்து தெளிந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். காதல் ரசம் சொட்டச் சொட்ட அனுபவிப்பவர்களாக இருப்பார்கள். ஒரு முடிவு எடுத்தால் அதிலிருந்து மீளமாட்டார்கள். இவர்கள் காதல் செய்வது அரிது. காதலித்ததால் காதலுக்காக உயிரையே கொடுக்கக் கூடிய அரிய வகையினர்.
♥#மஞ்சள்நிற உடை:
இவர்களின் காதல் அளவுக்கு அதிகமாக இருக்கும். காதலிக்கும்போதே தன் துணை இப்படி இருக்க வேண்டும் என மனக்கோட்டை கட்டி விடுவர். இவர்களுக்கு துணை கிடைப்பது அரிது. இருந்தாலும் அது பொய்யான அன்பாகவே இருக்கும். தன் மனைவியை காதலித்து மகிழ்வர்.
♥#கருப்புநிறம்:
இவர்கள் இயல்பாகவே அமைதியாக இருப்பார்கள். எளிதில் அனைவரையும் பேச்சின் மூலம் கவர்ந்துவிடுவர். இருந்தாலும் காதல் என்று வரும்போது காரணமில்லாமல் இவர்களின் காதல் நிராகரிக்கப்படும். மனஅழுத்தம் அதிகம் உண்டு. இறுக்கமான முகத்துடன் காணப்படுவதால் இவர்கள் ரொமான்ஸ் பக்கமே செல்லமாட்டார்கள்.
♥#ஆரஞ்சுநிற உடை:
இவர்கள் இயற்கையிலேயே கூச்ச சுபா
வம் உடையவர்களாக இருப்பார்கள். எளிதில் எதையும் நம்பிவிடுவார்கள். காதலித்த சில மாதங்களிலேயே நிச்சயதார்த்தத்துக்கு ரெடியாகிவிடுவார்கள். இவர்கள் நிச்சயாதார்த்தம் செய்த பெண்ணிடம் தன் மனதில் உள்ளவற்றை கூறிவிடுவர். பெண்கள் இதற்கு நேர்மாறாக தைரியமாக இருப்பர். எதையும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பர்.
♥#கிரேகலர்-காதலை விரும்பாதவர்கள் :
இவர்களின் மனநிலை எப்போதும் காதலை பற்றி யோசிக்காது. காதலுக்கு எதிராகவே பேசிக்கொண்டு இருப்பர். காதலிப்பவர்களை தூற்றிக்கொண்டே இருப்பர். திருமணமான பின் மனைவியை காதலிப்பர்.
0 Comments
Thank you