♥கணவன் தன் மனைவியிடம் எதிர்பார்க்கும் 10 விசயம்
#அங்கீகாரம்
உங்களின் ஆண் துணை உங்களுக்கு உதவிகரமாகவும், பக்கபலமாகவும் இருக்கும் போது நீங்கள் அந்த உறவை அங்கீகாரம் செய்ய வேண்டுமென ஆண்கள் விரும்புகிறார்கள். இதை முழுமையாக நீங்கள் அறிந்து கொண்டால், ஆணின் சுய மதிப்பு தனக்குள்ளேயே அதிகமாகும். அவன் தன்னைத் தானே இன்னும் அதிகமாக மதிக்கத் தொடங்குவான். உங்களுக்கு மேலும் பக்கபலமாக இருப்பான். உங்களுக்குகாக இன்னும் உழைப்பான்.
#காயப்படுத்தும்
♥இன்றைய சுழலில் நினைத்த வாழ்க்கை என்பது கடினமாகி விட்டது. ஒரு சில நினைத்த காரியங்கள் ஆணுக்கு எதிர்பார்த்த பலன் தராதபோது மனதளவில் உடைந்துவிடுவான். ஓர் ஆண் இக்கட்டான சூழலில் இருக்கும்போது அவனை நீ செய்தது தவறு என்றோ, விமர்சனம் செய்வதோ, தவறுகளை சுட்டிக்காட்டவோ செய்யாதீர்கள். அதற்கு பதில், அவனுடைய இடத்தில் இருந்து நீங்கள் யோசியுங்கள். அவனுக்கு பக்கபலமாக இருந்து உங்களால் எந்த வழிகளில் எல்லாம் உதவ முடியுமோ, அந்த வழிகளில் உதவ முயற்சி செய்யுங்கள்.
#தனிமையை_அனுமதியுங்கள்
♥நாம் சந்தோஷமாக இருக்கும் போது எல்லோரிடமும் அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வோம். ஆனால் கஷ்டகாலத்தில் தனிமையில் இருப்பதையே விரும்புவோம். ஒருவருடைய தனிப்பட்ட எண்ணங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைத் அறிந்துகொள்ள, சில மணி நேரங்கள் கண்டிப்பாக தேவைப்படும். ஆனால் தனிமையில் கணவன் இருப்பதை பெண்கள் விரும்புவதில்லை.
♥ஏனெனில், நம்மைச் சுற்றியுள்ளவர்கள், பணியிடம் போன்றவை நாம் எதிர்பார்த்தது போல இல்லை. சில விஷயங்கள் மிகவும் சிக்கலானவையாக மாறி விடுகின்றன. எனவே, உங்கள் கணவருக்கு எப்போதெல்லாம் தனிமை என்பது தேவைப்படுகிறதோ, அந்த நேரங்களில் அவருக்கான நேரத்தை, எடுத்துக்கொள்ள தடை செய்யாதீர்கள். இந்த தனிமை அவரின் தவறு, கோபம் போன்றவை விலாவாரியாக அறிந்து கொள்ள உதவும்.
#சிறந்த_வேலை
♥வீடு வேலைகளிலோ, சமையல் செய்யும் போதோ, குழந்தை பராமரிப்போ எதுவாக இருந்தாலும் வீட்டு வேலைகளில் உங்களுக்கு கணவன் உதவி செய்தால் அதனை அங்கீகரிக்க வேண்டுமெனவும் அவன் விரும்புகிறான். பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய சாதனைகளை மற்றவர்கள் புகழ்வதை கேட்க விரும்புகின்றனர். எனவே அது போன்ற கணவன் உதவிகரமாக இருக்கும் சமயங்களில், ‘உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது’ என்ற சொக்க வைக்கும் வார்த்தைகளை கூறினால் கணவன் உள்ளம் குளிர்ந்து போவான்.
#மன்னிப்பு
♥எப்போதும், எல்லோராலும் எல்லா விஷயத்திலும் சரியாக செய்ய முடியாது. எதிர்பாராத சில நேரங்களில், நாம் செய்யக்கூடாது என்று நினைத்தாலும் நம்மை மீறி ஒரு சில தவறுகள் நடந்து விடும். அந்த சமயங்களில் தவறு செய்தவர்கள் முதலில் மன்னிப்பு கேட்டு விட வேண்டும். ஆனால் பெரும்பாலான பெண்கள் முதலில் மன்னிப்பு கேட்க தயங்குகின்றனர். அந்த சமயங்களில் ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்டு விட வேண்டும். இதனால் கணவன் மாணவி உறவு மேம்படும்.
#தோற்றத்தைப்_பாராட்டுங்கள்
♥தன்னுடைய தோற்றத்தில் அதிக அக்கறை இல்லாதன் போல, கணவன் நடந்துகொள்ளும்போது, நீங்கள் அவனை இன்னும் அதிகமாக ஈர்க்க வேண்டும். அது மட்டுமில்லாமல், நீங்கள் கவர்ச்சியாகத்தான் உள்ளீர்கள் என்று கூறுங்கள். இது அவனுடைய தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மையை போக்கும். அவ்வாறு செய்வதால், தன்னுடைய தோற்றத்தை மேம்படுத்த அவரை ஊக்குவிக்கும்.
#நண்பர்கள்
♥உங்களின் கணவரின் வாழ்க்கையில், நீங்கள்தான் முக்கிய இடம் வகிக்கிறீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவனுகென்று தனிப்பட்ட நேரத்தை நண்பர்களுடன் செலவிட நினைத்தால் அதற்கான அனுமதியை வழங்குங்கள். குடும்பம், பொருளாதாரம், தொழில் போன்ற இடங்களில் இருக்கும் மன அழுத்தங்களிலிருந்து விடுபட ஆண்களுக்கு நண்பர்கள் தேவை. ஏனெனில் உங்களிடம் பேச முடியாத பல விஷயங்களை அவர் தனது நண்பர்களிடம் விரிவாக பேசுவார். இது அவரின் மன அழுத்தத்தை போக்க உதவும்.
#நன்றி
♥கணவன் உங்களுக்கு உதவி செய்யும்போது, அது சிறு செயலாக இருந்தாலும், ஒரு மனைவியாக அவருக்கு நன்றி சொல்ல தயங்காதீர்கள். அவ்வாறு நீங்கள் தெரிவிக்கும் நன்றி மற்றும் சிறு சிறு பாராட்டுக்கள் வருங்காலங்களில் இரட்டிப்பாக உங்களுக்குத் திரும்ப கிடைக்கும்.
#இலக்குகளைபகிர்ந்துகொள்தல்
♥ஆண்கள் பெரும்பாலும் தன்னுடைய குடும்பம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் பற்றி அடிக்கடி திட்டமிட்டுக் கொண்டு இருப்பார்கள். வாழ்க்கையில், தாங்கள் அடைய வேண்டிய இலக்குகள் ஆண்களுக்கு மிகவும் முக்கியமானவை. எனவே, அவனுடைய கனவுகள் பற்றியும் பேசுவதற்குப் போதுமான நேரம் ஒதுக்குங்கள். முடிந்தால் அவனுடைய இலக்குகளை அடைய நீங்கள் உதவிகரமாக இருந்தால் அது அவனுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.
#நீ_வேண்டும்
♥ஒரு பெண், எனக்கு நீதான் தேவை என்று கூறும்போது, அந்த வார்த்தைகள் உண்மையிலேயே, அவனைப் புத்துணர்சியாக வைத்து கொள்ள உதவும். ஆணின் மதிப்பு, அவனின் ஊக்குவிக்கும் தன்மை, ஆதரவு மற்றும் நகைச்சுவை உணர்வு போன்றவை ஓர் ஆணை மகிழ்ச்சிக்குரியவனாகவும், அன்பிற்குரியவனாகவும் வைத்திடும் என்பதைத் புரிந்து கொள்ளுங்கள்.
♥ஓர் ஆண் பெண்ணிடம் எதிர்பார்க்கும் வார்த்தைகளில் மிக முக்கியமானது ‘நான் உன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்’ என்பது. ஆண்களைப் பொறுத்தவரை, பெண்ணின் இந்த எண்ணமானது, உண்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
♥இவற்றை நீங்கள் உங்கள் துணையிடம் கடைபிடித்து வாருங்கள், ஆணானவன் உங்களையே சுற்றி சுற்றி வருவான்.
0 Comments
Thank you