#வாழ்க்கையில் பலரை #நேசித்திருப்பீர்கள்
#பிரிந்து விடுவீர்கள் - ஆனால் பிரிந்த பிறகும் சிலரை நேசிப்பீர்கள். சேர்ந்து வாழ்வதில் மட்டுமே தூய #அன்பு நிலைத்திருப்பதில்லை...
உங்களுக்காக எதையும் #இழப்பேன் என்று பலர் கூட இருந்திருப்பார்கள். நீங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்ததற்கும் அவர்களே காரணமாகவும் இருந்திருப்பார்கள்.
#மனசுக்குப் பிடித்தவர்களோடு பேசும்போது
யாரும் விவாதம் செய்து சண்டை போடுவதில்லை...
இந்த விட்டுக் கொடுப்பையே புரிந்து கொள்ளாத உறவுகள் பேசும் நியாயம் போலியானது.
விருப்பமானவரோ நெருக்கமானவரோ அவரது #தவறை அந்தக் கணத்திலேயே சுட்டிக்காட்டி பேசுங்கள். அது முடியவில்லை என்றால் அவரை விலகி வந்த பின்பு அவரை #விமர்சிப்பதற்கு உங்களுக்குத் தகுதி இல்லை...
எவ்வளவுதான் பழகினாலும் ஒருவரை இன்னொருவரால் முழுதாகப் #புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்களது தேவைகள் பலதரப்பட்டவை ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக பேசும் சூழ்நிலை அவர்களுக்கு உருவாகிவிடும்.
அவர் இப்படி இவர் அப்படி என்று எவரையும் கணக்குப் போட்டு நீங்கள் ஏதோ ஒன்றை தீர்மானித்து விடாதீர்கள். #சந்தர்ப்பங்கள் நிர்ப்பந்தங்கள் அவர்களை எவ்வாறு மாற்றும் என்று அவர்களுக்கே தெரியாது.
#வேஷம் போடும் மனிதர்களை முதலில் கண்டறியுங்கள். உண்மையான #அன்பை அவர்களிடம் நீங்கள் கொடுப்பதும்... அல்லது அவர்களிடமிருந்து அதை நீங்கள் எதிர்பார்ப்பதும் பயனற்றது.
#வானவில்_அழகாக இருக்கிறதென்று வானத்தை வெறுத்துவிடாதீர்கள்.
#அழகுக்கு ஆயுள் குறைவு..! 😢
0 Comments
Thank you