#மாவீரர்கள் 🔥❤️
உன்னையும் என்னையும் போன்ற #இளம்பிள்ளைகள் சிலர் வாழ்ந்தனர்.. நம் சம காலத்தில்
உனக்கு தெரியுமா..?
உன் நாவிலும் என் நாவிலும் நாள்தோறும் பேசும் தாய் தமிழைத்தான் அவர்களும்
பேசினர்..
உன்னையும் என்னையும் போல் அந்த இளம்பிள்ளைகள்..
வானுயர்ந்த புகழ்மிக்க பல்கலைகழங்களில் பட்டம் பெற்றவர்கள் அல்ல..
வானத்தைவிடவும் புகழ்மிக்க இலட்சியங்களோடு அவர்கள் வாழ்ந்தனர்..
எந்த நடிகரையும் அவர்கள் தலைவராக கொண்டாடியதில்லை..
ஆனால்
உன்னதமான ஒருவனை அவர்கள் தலைவனாக கொண்டிருந்தனர்..
அவர்கள் திரையரங்குளில் சத்தம் போட்டதில்லை..
பதுங்கு குழிகளின் நிசப்தம் அறிந்தவர்கள்..
விக்கெட்கள் விழுந்துவிட்டதற்காக பொறுமியவர்கள் அல்ல.. விழும்
பிணங்களுக்கு இடையே ரவைகளை பொறுக்கி கொண்டிருந்தவர்கள்...
அவர்கள் பொறியியல் படித்தவர்கள் அல்ல..
மின்சாரம் உற்பத்தி செய்யவும் வாகனங்களை தயாரிக்கவும் அவர்களுக்கு தெரியும்..
விடுதலை வேள்விக்கான மூலப்பொருட்களிலிருந்து
முழுமையான தளவாடங்கள் வரை அவர்களே தயாரித்தனர்..
அவர்கள் மாலுமிகள் அல்ல..
கப்பலோட்டினர்..
அவர்கள் விமானிகள் அல்ல.
விமானம் இயக்கினர்..
அவர்கள் தத்துவம் படித்தவர்கள் அல்ல..
தத்துவமாகவே வாழ்ந்தனர்..
அவர்களில் பலர் பள்ளிப்படிப்பையே முடித்தது கிடையாது..
ஆனாலும் அவர்களைப்போல் களத்தில் யாரும் பாடம் கற்பிக்க முடியாது..
அவர்கள் வாழ்வின் அர்த்தம் அறிந்தவர்கள் அல்ல.. ஆனால் அவர்களைப்போல் அர்த்தமுடைய வாழ்வை யாரும் வாழ்ந்துவிட முடியாது..
அவர்கள் புனித நூல்களின் வார்த்தைகளை ஓதியவர்கள் அல்ல..
ஆனால் அவர்கள் உச்சரித்த மண் விடுதலை என்ற வார்த்தையை விட புனிதமானது வேறில்லை..
எந்த துறவியைவிடவும் அவர்களுடைய துறவறம் உயர்ந்தது..
எந்த தவசிகளின் தவங்களை விடவும் அவர்களின் விடுதலை தவம் உயர்ந்தது..
அவர்கள் ஒவ்வொரு நாளும் அடிபட்டு வாழ்ந்தனர்..
ஒரு நாளும் அடிமையாய் வாழ்ந்ததில்லை..
அவர்கள் இருந்தவரை அவர்களுடைய மண் அவர்களுடையதாக இருந்தது..
அவர்கள் இருந்தவரை அவர்களுக்கென்று ஒரு தேசம் இருந்தது..
அவர்கள் மண் அவர்களிடம் இல்லாமல் போனபோது அவர்கள் இந்த மண்ணிலேயே இல்லாமல் போயினர்.
0 Comments
Thank you