♥அமைதியாய் இருக்கும் மனிதனிடம் மொத்த பிரபஞ்சமும் அடங்கிவிடும்.
♥சுயநலம் என்பது மிகச்சிறிய உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.
♥பசுவின் மடியை கொசு கடித்தாலும் அது பாலைக் குடிப்பதில்லை, இரத்தத்தைத்தான் குடிக்கும்.
♥ஆயிரம் உபதேசங்களைவிட ஓர் அனுபவம் சரியான பாடத்தைக் கற்பிக்கும்.
♥சகிப்புத்தன்மை என்பது நம் பலவீனத்தின் அறிகுறி அல்ல. அது நம் மனவலிமையின் உச்சக்கட்டத்தை காட்டுகிறது. பலவீனத்தின் உச்சக்கட்டம் என்பது ஒருவரின் பழியுணர்ச்சியிலும், பொறாமையிலும் தான் தெரியவரும்.
♥சகிப்புத்தன்மை என்பது ஒருவர் மேல் நம்பிக்கை இல்லாமல், பிடிக்காமல், ஒதுங்கி போகும் ஒன்றல்ல. நம்மிடம் ஒத்துப்போகாத ஒருவரிடம், கண்ணியமாய் நாம் நடந்துகொள்ளும் முறைதான் அது.
♥அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
♥ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.
♥புன்னகை - பிரச்சனைகள் வருவதை தள்ளி போடும்..!!
♥மௌனம் - பிரச்சனைகளே வராமல் தடுக்கும்..! எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த வாய்தான் காரணம்..!!!
♥அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
♥உணர்ச்சி உள்ள மனிதனையும், அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது....
♥வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும்தான் அதிகமாக வருகிறது என நினைப்பவர்கள் அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்...
0 Comments
Thank you