HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சிறந்த மனைவிக்கான ஆறு(6) தகுதிகள்..

♥சிறந்த மனைவிக்கான ஆறு(6) தகுதிகள்..

♥திருமணத்தின் பின் கணவனுக்காக மனைவி அனைத்தையும் விட்டுக் கொடுப்பாள். ஒரு நாள் மனைவி வீட்டில் இல்லை என்றாலும், அவர்களது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. வீட்டில் உள்ளோரின் தேவை அறிந்து அதற்கு ஏற்ப அனைத்தையும் செய்ய பெண்களால் மட்டுமே முடியும். சிறிய சிறிய ஆசைகளைக் கூட கணவருக்காக இழக்க அவர்களால் மட்டுமே முடியும். இங்கு சிறந்த மனைவிக்காக 6 தகுதிகளாக கூறப்படுபவற்றைப் பார்க்கலாம்.

♥1.என்ன தான் கணவன் மனைவிக்குள் ஒளிவு மறைவு இல்லாமல் இருந்தாலும், கணவனுக்கும் மனைவிக்கும் அவர்களுக்கென்ற தனிப்பட்ட சொந்த விஷயங்கள் இருக்கும். அது உங்கள் வாழ்க்கையிலிருந்து வேறுபட்ட ஒன்றாக இருக்கும். அவர் நண்பர்களுடன் நேரம் செலவிட விரும்பலாம் அல்லது வேறு ஏதாவது ஒன்றாகக் கூட இருக்கலாம். அது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். அதற்காக கவலையடைய வேண்டியதில்லை, அவர் அந்த நாளின் இறுதியில் உங்களைத் தேடி வந்து விடுவார்.

♥2. யாருக்கும் ஒரு குழப்பமான சூழ்நிலையில் வாழப் பிடிக்காது. உங்கள் கணவரும் அதில் அடங்குவார். நேர்மறையான எண்ணங்களுடன் உங்கள் உறவை எடுத்துச் செல்ல உங்கள் இடம் மற்றும் சுற்றுப்புறத்தை சரிவரப் பராமரிக்கவும், மாற்றங்களை ஏற்படுத்தவும் வேண்டும். உங்கள் வீட்டை அலங்கரித்து உங்கள் கணவருக்கு ஆச்சர்யத்தைக் கொடுங்கள். அவை உங்கள் கணவரால் விரும்பத்தக்கதாக இருக்கும். 

♥மிகப் பிரபலமான வாசகம் ஒன்று, “மனைவி என்பவள் சிறந்த தோழியாகவும், காதலி இரண்டாம் அல்லது மூன்றாம் நபர் மற்றும் பணிப்பெண்ணே இவர்களுள் முக்கியமான ஒருவர்”, என்றும் சொல்லப்படுவதுண்டு. உங்கள் கணவர் ஆச்சர்யத்தைக் கொடுத்தற்காக, உங்களைப் பாராட்டவும், ஊக்குவிக்கவும் செய்வார்.

♥3. நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்கள் என்றால், எப்போதும் அவர்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டே இருங்கள். நீங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் அவருக்காக உணருகிற விதத்தையும் அறிந்து கொள்ள, உங்கள் கணவர் எப்போதும் விரும்புவார். 

♥ஒரு மனிதனின் இதயத்திற்கு முக்கியமானது அவரது வயிறு! நீங்கள் அங்கு சென்றால், நீங்கள் கிட்டத்தட்டப் போரில் வென்றிருக்கின்றீர்கள் என்றே சொல்லலாம். நீங்கள் அவரை ஆச்சரியப்படுத்தும் பரிசுகளைக் கொடுக்கவும் மற்றும் சிறப்பான சந்தர்ப்பங்களை ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடவும் செய்யுங்கள். உங்கள் கணவர் எப்போதும் உங்கள் அருகாமையிலேயே இருப்பார்.

♥4.உறவுகளுக்குள் அத்தியாவசியமான ஒன்று நம்பிக்கை. நீங்கள் எப்போதும் உங்கள் கணவருடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் கணவரின் மீது நம்பிக்கை வையுங்கள், முழுமையாக நம்புங்கள். உறவுகளுக்குள் இருக்கும் நம்பிக்கையே, அவர்களை சிறந்த உறவாக மாற்றுகிறது. அவர் செய்யும் செயல் உங்களை பாதித்தால், அதைக் கணவரிடம் தெரிவித்து மாற்ற முயற்சியுங்கள். இது உங்களை மகிழ்ச்சியடைய செய்வதோடு, உங்கள் உறவை பலப்படுத்தும்.

♥5. உங்கள் கருத்துகள் அவருடன் பொருந்தவில்லை என்பதால், நீங்கள் இணக்கமற்றவர் என்று அர்த்தம் இல்லை. சிறந்த மனைவியாக இருப்பதால், நீங்கள் எப்போதும் உங்கள் உறவுமுறையைப் பார்த்து நெருங்க நினைப்பதை விட, மற்ற வேலைகளில் கவனம் செலுத்தி உங்களை நிரூபிக்க வேண்டும். இறுதியில், நீங்கள் இருவரும் சிறந்த துணையாகி விடுவீர்கள்.

♥6. நீங்கள் உங்கள் வாழ்வில் எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுங்கள். உங்களது பிரச்சனைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், நேர்மறை எண்ணத்துடன் செயல்படுங்கள். நீங்கள் எப்போதும் அன்புள்ள, மகிழ்ச்சியான, பாசமான, அன்பான, அக்கறையுள்ள, அமைதியாய் மற்றும் பல குணநலன்களுடன் எப்போதும் இருக்க வேண்டும். உங்கள் நேர்மறை எண்ணங்கள் உங்கள் கணவரின் மீது கண்களுக்குத் தெரியாத மாயையாய் செயல்படும். உங்கள் கணவர் வேலை முடிந்து வீடு திரும்பிய உடன், புன்னகையுடன் கட்டியணைத்து வரவேற்றிடுங்கள். எவ்வித மாற்றமுமின்றி அவருக்கு உறுதுணையாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்நாள் முழுவதும் இருங்கள்....

Post a Comment

0 Comments