♥பெண் என்பவள்
சிரம் தாழ்த்த வேண்டியவள் அல்ல
சிரம் தாழந்து வணங்க வேண்டியவள்
♥துன்பமாம் பூகம்பங்கள் சூழும் வேளை
பூக் கம்பம் இல்லை அவள்
♥புயலால் வீழ்ந்து போக அவள் மரமில்லை
பூமியே தடம் புரண்டு போனாலும் வெடித்து
முளைக்கும் நாணல் அவள்
♥தேள் கொட்டும் சமுதாயத்தில் அவள்
தேன் இல்லை
♥அவள் ஓர் குட்டையில் வாழும் மீனுமில்லை
எப்போதும் ஆண் போடும் துாண்டிலை சேர்வதற்கு
♥கண்ணீரே காவியமானாலும் கரையாதவள்
எரிந்திடும் கல்லில் சிலை வடிப்பவள்
♥தாய்மையின் மகத்துவம் அறிந்தவள்
தன் வயிற்றுள் கருவை தன்னை விட
பாதுகாப்பவளே தவிர அதை அழிப்பவள் அல்ல பெண்
♥நாணத்தால் தலை குனிவாளே அன்றி
வெட்கித்து அல்ல
♥தீமையை கண்டால் மூழ்குபவளும் அல்ல
விரண்டோடுபவளும் அல்ல
விரட்டி அடிப்பவளே பெண்.
0 Comments
Thank you