♥ஒரு வயதான தாயும் ,மகனும் வெளிப்புற வாசலில் அமர்ந்து இருந்தார்கள்
அப்பொழுது அந்தப்பக்கமாக ஒரு குருவி பறந்து சென்றது .... அதை பார்த்த அந்த வயதான தாய் மகனை தட்டி கேட்டால் அது என்ன வென்று ..
♥மகன் கூறினான் அது குருவி அம்மா ... என்று ,,,
அதே குருவி திரும்பவும் பறந்து சென்று வேறு இடத்தில் அமர்ந்தது
திரும்பவும் மகனைத்தட்டி கேட்டால் அது என்ன வென்று ... மகன் குருவி அம்மா என்றான்.
♥அதே குருவி திரும்பவும் பறந்து சென்று வேறு இடத்தில் அமர்ந்தது
திரும்பவும் மகனைத்தட்டி கேட்டால் அது என்ன வென்று
மகன் கோபமாக அது குருவி என்று எத்தனை தடவை சொல்றது ... கொஞ்சம் பேசாமல் இரு அம்மா என்றான் ..
♥அந்த வயதான தாய் வீட்டின் உள்ளே சென்று பழைய டயரி ஒன்றை தூசு தட்டி எடுத்து வந்து மகனிடம் கொடுத்து இதை சத்தமாக படி என்று கூறினால் ..
மகனும் சத்தமாக படித்தான் ...
♥என் மகனுக்கு நான்கு வயது இருக்கும் .... வெளிப்புற வாசலில் அமர்ந்து இருந்தான் அப்பொழுது அந்தப்பக்கமாக ஒரு குருவி பறந்து சென்றது அதை பார்த்து என்ன வென்று கேட்டான் .. குருவி என்று கூறினேன் ...
♥அதே குருவி திரும்பவும் பறந்து சென்று வேறு இடத்தில் அமர்ந்தது
திரும்பவும் என்னை தட்டி கேட்டான்அது என்ன வென்று ..
நானும்குருவி என்று கூறினேன்
♥இவ்வாறு இருவது தடவைகள் என்னிடம் கேட்டான் நானும் குருவி என்று கூறி ....என் மகனை சந்தோஷத்தில் வாரி அணைத்துக்கொண்டேன் ....!
தாயின் அன்புக்கு நிகர் ஏது ...!!
0 Comments
Thank you