♥தை மாதத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்..!!
♥ தை மாதப்பிறப்பு என்பது சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலமாகும்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும், கற்பனை திறன் மிகுந்தவர்களாகவும் இருப்பர். இவர்கள் அதிகம் சம்பாதித்தாலும் சிக்கனமாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிகம் யாருடனும் நெருங்கிப் பழக மாட்டார்கள்.
♥இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மனதில் ஒன்று வைத்துக்கொண்டு புறம் ஒன்று பேசத் தெரியாதவர்கள். இவர்கள் தமக்கு பிடித்த ஒரு பொருளையோ அல்லது பிடித்த ஒரு நபரையோ பற்றி அடிக்கடி பாராட்டிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். வருமானத்திற்கு ஏற்பதான் செலவு செய்வார்கள். வேலை என வந்துவிட்டால் மிகவும் புத்திசாலித்தனமாகவும், கெட்டிக்காரர்களாகவும் செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளிடம் நல்ல பணிவுடன் நடந்து கொள்வார்கள். தனக்கு வேண்டியதை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
♥இந்த மாதத்தில் பிறந்தவர்களை நம்பி எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. ஆனால் தை மாதத்தில் பிறந்தவர்களின் பேச்சு வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பதுபோல் இருக்கும். தை மாதத்தில் பிறந்த பெண்கள் அழகிய முகம் கொண்டவர்களாக இருப்பர். தை மாதத்தில் பிறந்தவர்களுக்கு உடன்பிறப்புகள் இருப்பது மிகவும் அரிதான விஷயமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்ல வேண்டும், இல்லையெனில் அவர்களின் விருப்பத்திற்கே நடந்து கொள்வார்கள். இவர்கள் குடும்பத்தாருடன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்துப் போகும் தன்மையுடையவர்கள்.
♥நிலப்புலன்கள், வீடு போன்ற அசையா சொத்துக்கள் பரம்பரையாக வருவதற்கு வாய்ப்புண்டு. இருந்தாலும் இவர்கள் சுயமாக சம்பாதித்து சொத்து சேர்ப்பார்கள். இவர்கள் தை மாதத்தில் பிறந்ததால், ஏற்ற தொழில் விவசாயம்தான். எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் சிந்தித்து செயல்படுவார்கள். இவர்கள் பயணம் செய்வதில் மிகவும் பிரியம் கொண்டவர்கள். ஆடை, ஆபரணங்கள் சேர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். இவர்களுக்கு நல்ல அறிவும், ஆற்றலும், அழகும் உள்ள வாழ்க்கைத் துணை அமைவார்.
0 Comments
Thank you