HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கடுகு சிறுத்தாலும் – பொறுமையில் புகார் இல்லை

♥கடுகு சிறுத்தாலும் – பொறுமையில் புகார் இல்லை

♥ஓர் ஊரில் வாழ்ந்து வந்த அண்ணன் தம்பிகளில், தம்பி சமர்த்தானவர், அண்ணன் சற்று சோம்பேறி. ஒரு நாள் இருவரும் காட்டுக்கு விறகு வெட்டச் சென்றனர். இருவரும், காலையிலிருந்து மதியம் வரை கஷ்டப்பட்டு விறகு வெட்டி அவற்றை இரு கட்டுகளாகக் கட்டினர். பின்னர் தாங்கள் எடுத்துச் சென்ற கட்டுச் சாதத்தை உண்டு களைப்பைப் போக்கினர். 

♥அதன் பின்னர் அண்ணனும், தம்பியும் விறகுக் கட்டுகளைத் தலையில் வைத்துக் கொண்டு நடக்கலாயினர். சிறிது தூரம் நடந்து சென்றவுடனேயே, விறகுக் கட்டுப் பாரமாக இருக்கிறதே என்று புலம்பிக் கொண்டே நடந்தார் அண்ணன். ஆனால் தம்பி எதுவுமே சொல்லாமல் நடந்து கொண்டிருந்தார். 

♥இதைப் பார்த்த அண்ணன், இருவரின் சுமையும் ஒரே அளவில்தானே இருந்தது,  ஆனால் தம்பி எதுவும் சொல்லாமல் எளிதாக நடந்து வருகிறாரே என்று சிந்தித்தார். பின்னர் தம்பியிடம், உனக்கு விறகுக் கட்டுப் பாரமாக இல்லையா? என்று கேட்டார். 

♥அதற்குத் தம்பி, இல்லை, எனது சுமை பாரமாக இல்லை, ஏனெனில் நான் அதில் ஒரு மூலிகை இலையை வைத்திருக்கிறேன் என்று சொன்னார். அப்படியா! அந்த மூலிகை இலை என்னவென்று சொன்னால் நானும் எனது சுமையில் வைத்துக் கொள்கிறேன் என்றார் அண்ணன். 

♥அதற்குத் தம்பி, அந்த மூலிகை இலையின் பெயர் பொறுமை என்றார். வாழ்வில் ஏற்படும் இன்னல்களை, இடையூறுகளை, தடைகளை, கடுகளவும் சினமுறாது, இன்முகத்துடன் அவற்றை ஏற்று வெல்வது பொறுமை.

♥பாரம் பாரம் என நினைக்காமல் பொறுமையாக வீடுவரை சென்றால் தான் நாளை உணவு என நினைத்தால் பாரம் இல்லை.

Post a Comment

0 Comments