♥#கொடுத்து_மகிழ்!
நான், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். இரண்டாயிரம் மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளியில், மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில், 'பிறருக்கு கொடுத்து மகிழ்வித்து மகிழ்' என்ற தினத்தை அனுசரிப்போம். இந்நாட்களில், மாணவர்களிடமிருந்து, மிகச் சிறிய அளவிலான பங்களிப்பை பெற்று, அதை, தேவையானவர்களுக்கு அளிப்போம்.
♥பெரும்பாலும், மாணவர்களிடம் இருந்து, ஒரு பிடி பருப்பு, அரிசி மூட்டை வாங்குவதற்காக ஒரு ரூபாய் நாணயம் போன்றவற்றை, பங்களிப்பாக பெறுவோம். 'சிறு துளி பெரு வெள்ளம்' என்பது போல, சேகரிக்கப்பட்ட பொருட்களை, மாதம் ஒருமுறை, முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர் மற்றும் சிறார் இல்லங்களுக்கு அளித்து வருகிறோம்.
♥சில சமயங்களில், நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் போன்ற கல்வி உபகரணங்களை கூட மாணவர்களிடமிருந்து பெற்று, சமுதாயத்தில் பின் தங்கியவர்களுக்கு கொடுத்து உதவுகிறோம்; இதற்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
♥இளம் வயதிலேயே, 'பிறரை மகிழ்வித்து தாமும் மகிழ்வோம்' என்ற நன்மதிப்பீடுகளை, இளநெஞ்சங்களில் பதிய வைப்பதில், நாங்கள் மகிழ்கிறோம்.
இதைப்போல, வசதி படைத்த, பல தனியார் பள்ளிகள், தங்களது மாணவர்களை ஈடுபடுத்தி, தங்களால் இயன்ற உதவியை செய்யலாமே!
♥— கே.ரவிக்குமார், சென்னை.
0 Comments
Thank you