#ஆணுக்கு_பெண்_நட்பு
பெண்ணுக்கு ஆண் நட்பு
கிடைத்த சில நாட்கள் எதற்காக இந்த தேடல்.....!!
#அன்புக்காகவா.... #ஆசைக்காகவா
#ஒரு புதிய சுகம்......!
காலை ஆனவுடன் ஒரு வணக்கம்.......
மதியம் ஆனவுடன் உணவு முடிந்ததா.?
என்ற விசாரணை ...
இரவு ஒரு வணக்கம்.....
எத்தனை எதிர்பார்ப்புகள்..?
இப்படியும் நம் மேல் அக்கறை கொண்ட
மனிதர்கள் உண்டா? என்று #மகிழ்கிறோம்
#நெகிழ்கிறோம்...!
பேசி கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள்....!
அலை பேசியை கூட சில நேரம் அழ வைக்கிறோம்....!
பேசும் ஒவ்வொன்றும் ஆச்சரியம்...
நம் பெயரை கூட அவர்கள் ரசிப்பதில் உள்ள சுகம்....!
தன்னை பற்றிய சுய புராணங்கள்
அவர்களை பற்றிய நம் கருத்துகள்...
புகழ் உரைகள்....
தன்னையும் உலகில் நேசிபவர்கள்
எங்கும் உண்டு என்ற மனகோட்டைகள்....!
இத்தனையும் சில நாட்களோடு
நின்று போவது ஏன்..?
நட்பில் #சுகமும் உண்டு #காயங்களும் உண்டு.....!
பழகிய கொஞ்ச நாட்களில்
முதலில் தோன்றிய ஆர்வம் கூட குறைந்து போகும்....!
சிலரை பிடிக்கவில்லை என்று விலகுகிறோம்....!
சிலரை நமக்கு பிடிப்பதனால் விலகுகிறோம்....!
நம் நட்பில்
ஒரு நாள் நட்பு வரும்...
ஒரு நாள் கண்ணீர் வரும்........
நம்மையே நம்மால்
கட்டு படுத்த முடியாமல் தவிக்கிறோம்...
சில நேரம்
"நமக்கு மட்டும்" என்று ஆசை கொள்கிறோம்....!
சொல்ல முடியாமல் தவிக்கிறோம்....
சொல்ல கூடாது என்று விலகுகிறோம்
நம் மன மாற்றத்திற்காக
அடுத்த நண்பர்கள்... அடுத்த புகழ் உரைகள்
அடுத்த...அடுத்த ...
என்றே போய் கொண்டே இருக்கிறோம்....
"இது மனம்" இப்படிதான்
பயணித்து கொண்டே இருக்கும்.....
நாமும் பயணிக்கலாமா...
#உலகில்_ஒன்றை_விட_மற்றொன்று
#நன்றாக_இருக்க தான் செய்யும்...!
நமக்கு நாமே புகழ்வதும்
சபிப்பதுமாய் இவை
இன்னும் எத்தனை நாட்கள்.....✍️?
0 Comments
Thank you