♥ வீட்டு பூஜையறையில் வைக்கவேண்டிய...
வைக்கக்கூடாத சாமி படங்கள் !!
♥சில தெய்வங்களின் படங்களை நம் வீட்டின் பூஜையறையில் வைத்திருப்பது சாஸ்திரப்படி முறையாகாது. ஆகையால் வீட்டில் எந்த சாமி படங்களை வைக்கலாம்? எந்த சாமி படங்களை வைக்கக்கூடாது? என்பதை பற்றி பார்ப்போம்.
#வைக்கவேண்டிய_படங்கள் :
♥விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ லட்சுமியுடன் கூடிய நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது பத்னியுடன் கூடிய கிருஷ்ணர் படங்களை வைக்கலாம்.
♥தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி மற்றும் லலிதாம்பாள், அஷ்டலட்சுமி. இது தவிர பானலிங்கம், சிவலிங்கம் ஆகியவற்றை வைத்து வழிபடலாம்.
♥ பூஜையறையில் வைக்கும் படங்கள் ஒரு ஜான் அளவு தான் இருக்க வேண்டும், அதற்கு மேல் இருகக்கூடாது. ஒரு ஜான் (கட்டை விரல் அளவு) மேல் உள்ள விக்கிரங்கள் வைப்பதாக இருந்தால் கண்டிப்பாக தினசரி அன்னம் வைத்து பூஜிக்கப்பட வேண்டும். தினசரியோ அல்லது வாரம் ஒரு முறையோ அபிஷேகம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.
#வைக்கக்கூடாத_படங்கள் :
♥ சாமி படங்களில் சனீஸ்வர பகவானின் படங்களை பூஜையறையில் வைக்கக்கூடாது.
♥ நவகிரகங்களின் படங்களை பூஜையறையில் வைத்து எப்போதும் பூஜை செய்யக்கூடாது.
♥ நடராஜரின் உருவ படத்தை வீட்டில் வைக்கக்கூடாது.
♥கடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவணம் கட்டிய நிலையில் உள்ள முருகப்பெருமானின் படத்தை வீட்டு பூஜையறையில் வைக்கக்கூடாது.
♥கோபமாக இருக்கக்கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யக்கூடாது.
♥ தலைக்கு மேல் வேல் இருக்கும். முருகனின் படத்தை பூஜையறையில் வைக்கக்கூடாது.
♥ருத்ர தாண்டவமாடும் உருவம், கொடூர பார்வை உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக்கூடாது.
♥மகிஷாசுர மர்த்தினி, ஆஞ்சநேயர், நரசிம்ம மூர்த்தி, தனித்த கிருஷ்ணர், முருகர், பிரத்தியங்கிரா தேவி, சரப மூர்த்தி போன்ற உக்கிர படங்களை வைக்கக்கூடாது. (உக்கிர தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கும் பட்சத்தில் அந்த சாமி படங்களை மட்டும் வைக்கலாம்).
♥உடைந்த சிலைகள், சிதைந்த சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்யக்கூடாது.
0 Comments
Thank you