♥உணவு நஞ்சாதல்
♥உணவுமூலம் பலநோய்கள் கடத்தப்படுகின்றன. இவை ஒட்டுமொத்தமாக உணவு நஞ்சாதல் என அழைக்கப்படும். உணவில் தொற்றானது ஏற்படுதலும் உணவில் பக்டீரியாக்களின் புறநச்சுகள் காணப்படுதலும் இருவிதமான உணவு நஞ்சாதலை ஏற்படுத்தும். இவை பக்டீரியாக்களால் மட்டுமன்றி வைரஸ் பங்கஸ் ஆகியவற்றினாலும் ஏற்படுத்தப்படலாம்.
♥உணவு மூலம் கடத்தப்படும் நோய்கள் உணவு தயாரிப்பு சமைத்தல் உணவு சேமிப்பு ஆகியனவற்றின் போதும் ஏற்படலாம். உணவுத் தயாரிப்பின் முன்னும் பின்னும் உணவு உடகொள்ள முன்னும் பின்னும் சுகாதார முறையான வழிமுறைகளை பின்பற்றுவதனால் உணவு நஞ்சாதலை பெருமளவு குறைக்கலாம். கைகளை உணவு சமைக்க உண்ணமுன்பு சவர்க்காரம் கொண்டு கழுவுதல் மூலம் பெருமளவிற்கு உணவு நஞ்சாதலை குறைக்கலாம்.
♥இதன் குணங்குறிகளாவன குமட்டல் வயிற்றுவலி வயிற்றோட்டம் காய்ச்சல் தலைவலி களைப்பு போன்றனவாகும். பொதுவாக உடலானது இத்தகைய அறிகுறிகளில் இருந்து இலகுவாக மீள்கிறது. கம்பைலோபக்டர் யேசினியா சல்மனெல்லா ஷிஜல்லா ஆகியவற்றின் தொற்றானது 1-3 வாரங்களின் பின் ஒருவகையான மூட்டுவாதத்தை ஏற்படுத்தலாம்.
♥உணவானது உட்கொள்ளப்பட்டு
1-6 மணிநேரங்களுள் அறிகுறிகள் தோன்றினால் அது பொதுவாக உணவில் ஏற்கனவே காணப்பட்ட பக்டீரியா புறநச்சு அல்லது இரசாயன நஞ்சினால் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் உயிருள்ள அங்கிகள் குடலில் பாதிப்பை ஏற்படுத்த சிறிதளவு காலம் தேவைப்படும். இது பொதுவாக 24-48 மணிநேரமாகும்
0 Comments
Thank you