HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

வேறென்ன வேண்டும்?

♥வேறென்ன வேண்டும்?

♥காபி ஆறிவிட்டது; அம்மா கொண்டு வைத்த போது இருந்த சூடும், மணமும் இப்போது இல்லை. 'ஆறின கஞ்சி, பழங்கஞ்சி' என்பதைப் போல், என் எதிர்காலமும் இப்படித்தான் ஆகப்போகிறதா... சிறந்த கல்லூரியில், நல்ல படிப்பை, நன்றாகத் தானே படித்தேன்... 'டாப்' 10ல் இல்லன்னாலும், கவிதை, கிரிக்கெட் என்று தனித்திறமை இல்லாவிட்டாலும், அரியர்ஸ் இல்லாமல், எந்த புராஜெக்ட்டையும் சொதப்பாமல், ராகிங், இன் - டிசிப்ளின்னு, கருப்புப் புள்ளிகள் வாங்காமல், 70 சதவீத மதிப்பெண்ணுடன் வெளி வந்த போது, ஏதோ ஒரு கம்பெனி, என்னை ஏற்றுக் கொள்ளும் என்று தானே நம்பினேன்...

♥'மூணு வருஷம் முடியப் போகுது; அங்கொன்றும், இங்கொன்றுமாக நாலு கம்பெனிகளில் குப்பை கொட்டியும், பெரிய நிறுவனங்களுக்கு, 'அப்ளை' செய்தாலும், இன்னும் நிலையான வேலையில் அமரவில்லயே...' என்று மனம் வருந்தியபடி அமர்ந்திருந்தான், ராகவ்.
''ராகவ் அண்ணா...'' என்றபடி வந்த பக்கத்து வீட்டுப் பையன், ''ப்ளூ வேல்ன்னு, ஆன் - லைன் கேம் இருக்காமே... தெரியுமா?'' என்றான், ஆவலுடன்!
''தெரியும்... ஏன் கேட்கிறே?''
''எனக்கும் அந்த விளையாட்ட விளையாடணும்; 'ஆப்' இருக்கா?''
''வேணாம்டா... அது, ரொம்ப டேஞ்சரான விளையாட்டு; நிறைய ஸ்கூல் பசங்க, 'சூசைட்' செய்து, இறந்து போயிருக்காங்க... அம்பது நாள் கேம்... தினம், 'டாஸ்க்' செய்யணும்; மெல்ல சீரியஸ் ஆகும்... உன்னை அறியாமலேயே அதுக்கு அடிமையாகி, எந்த டாஸ்க்கையும் செய்ய துணிஞ்சுடுவே... கடைசியா, உன்னை மாடியில இருந்து குதிக்கச் சொல்லும்...'' என்றான்.

♥''அவ்ளோ மோசமான விளையாட்டா...'' என்று பயந்தான்.
''ஆமாம்... சரி, கணக்கு பாடத்துல ஏதோ புரியலன்னு சொன்னியே... எடுத்துட்டு வா சொல்லித் தர்றேன்...''
''வேண்டாம்ண்ணா, பரிமளாக்கா சொல்லிக் கொடுத்துட்டாங்க...'' என்றான்.
''பரிமளாவா... எப்போ வந்தா...'' என்றான், ஆச்சரியத்துடன்!
பக்கத்து தெரு பெண், பரிமளா; பதினைந்து ஆண்டு பழக்கம்; நல்ல தோழி.
''படிப்பு முடிஞ்சாச்சாம்... வந்து ரெண்டு நாளாகுது,'' என்றவன், ''வரேண்ணா... நான் கிரிக்கெட் விளையாடப் போகணும்,'' என்று கூறி, ஓடினான்.

♥'பரிமளாவின் தொழிற்படிப்பு முடிந்து விட்டதா... நேற்று தான் அவள் கல்லூரியில் சேர்ந்த மாதிரி இருக்கிறது...' என்று எண்ணியவன், அவளைப் பார்க்க கிளம்பினான்.
''வாப்பா ராகவ்... என்ன ரொம்ப இளைச்சுப் போயிட்ட... நீ சரியா சாப்பிடறதில்லன்னு உங்கம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க...'' என்றாள், பரிமளாவின் அம்மா.
''அதெல்லாம் இல்லம்மா... நல்லாத்தான் சாப்பிடுறேன்; பரிமளா வந்தாச்சாமே... எங்க காணோம்,'' என்றான்.
''ஏதோ வேலைக்கு அப்ளை செய்யணுமாம்... அவ தோழி வீட்டுக்குப் போயிருக்கா...''
''சரிம்மா... வந்தா, எங்க வீட்டுக்கு வரச் சொல்லுங்க; கல்லூரி, 'லைப்' பத்தி பேசணும்.''

♥''சரிப்பா வரச் சொல்றேன்,'' என்றவள், ''பரிமளா அப்ளை செய்திருக்கிற கம்பெனிக்கு நீயும் அப்ளை செய்துப் பாரேன்... பெரிய கம்பெனியாம்... அமேசானோ, கூகுளோ ஏதோ சொன்னா, உலகம் பூரா அந்த கம்பெனி இருக்காம்...''
''அதெல்லாம் எப்பவோ செய்துட்டேம்மா... ஒரு, 'ஆபரும்' வரல.''
''மறுபடி முயற்சி செய்யலாம்ல...''
''இல்லம்மா... புதுசு புதுசா படிச்சுட்டு வராங்க... அவங்களுக்கு இருக்கிற மரியாதை, மூணு வருஷ பழசுக்கு இல்ல...''
''ஏம்ப்பா இப்படி சொல்ற... நிச்சயம், உனக்கு வழி பிறக்கும்; காபி போடுறேன்... குடிச்சுட்டுப் போ...'' என்றாள்.
''வேண்டாம்மா... நான் கிளம்புறேன்; பரிமளா வந்தா சொல்லுங்க,'' என்று சொல்லி, தன் வீட்டிற்கு சென்று விட்டான்.
'பெரும் தோல்விகளுக்கு பின்னும், நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்குப் பெயர் தான் வாழ்க்கை...' என்று, தன் நண்பன் சொன்னது, ராகவிற்கு நினைவுக்கு வந்தது.

♥'அவன் கூறியது சாத்தியமா... தொடர் தோல்விகளுக்குப் பின், நம்பிக்கை எப்படி பிறக்கும்... தோல்விகள் தந்த துன்பங்களில் மனம் துவண்டு விடாதா... நொந்து போன மனதில் நம்பிக்கை செடி எவ்வாறு துளிர்க்கும்...' என்று எண்ணினான்.
''ஹாய் ராகவ்... எப்படி இருக்கே...'' சிரித்தபடி வந்தாள், பரிமளா.
''வா பரிமளா... அட... இதென்ன பளிச்சுன்னு மாறிட்டே...'' என்று புன்னகையும், வியப்புமாய் சொன்னான், ராகவ்.
''நீ கூட வெயிட் குறைச்சு, 'பெர்பெக்ட்டா' இருக்கே...'' என்றாள், பரிமளா.
''நாலு வருஷம் ஓடிப் போச்சுல்ல... உட்காரு,'' என்றவன், ''அம்மா, பரிமளாவுக்கு குடிக்க ஏதேனும் கொண்டு வா,'' என்றான்.
''அப்புறம், எப்படி இருக்கே...''
''இருக்கேன்... உண்மைய சொல்லணும்ன்னா சுவாசிச்சுட்டு இருக்கேன்...''
'' ஏன் இப்படி சொல்றே...''
''நான் விரும்பற வாழ்க்கை இல்ல இது...''
''புரியல...''

♥''படிச்சு முடிச்சு மூணு வருஷம் ஆச்சு; இன்னும் உப்புமா கம்பெனிகள்ல தான் குப்பை கொட்டுறேன்... வேலைகள் நிறைய கத்துக்கிட்டாச்சு... வயர்லெஸ் ஸ்பீக்கர் கூட நானே கிரியேட் செய்துருக்கேன். வயதானவர்கள் நடக்கும் போது தடுமாறி, விழுந்துடாமல் இருக்குறதுக்கு, ஸ்பெஷல் செருப்புகள் தயார் செய்ற தொழில்நுட்பம் கூட என்கிட்ட இருக்கு... சுரங்கங்கள்ல தண்ணீரை சேகரிச்சு, அதன் மூலமா சோலார் மின் உற்பத்திய எப்படி மேம்படுத்தலாம்ன்னு ஒர்க் செய்துட்டிருக்கேன்.''

♥''அப்படியா... '' என்று, வியந்தாள், பரிமளா.
''இதையெல்லாம் பெருமைக்காக சொல்லல பரிமளா... எனக்குள்ள இருக்கிற தேடல் உண்மையானதுன்னு உனக்கு புரிய வைக்கத் தான் சொல்றேன்... ஆனா, காலம் எனக்கு எதிராகவே இருக்கு...'' என்ற போது, அவன் குரல் கரகரத்தது.
''காலம், யாருக்கும் பாரபட்சம் காட்டாது; அதை, நீ சரியா புரிஞ்சுக்கலேன்னு தான் எனக்குத் தோணுது...'' என்றாள், பரிமளா.
''என்ன சொல்றே... நான் புரிஞ்சுக்கலயா?''
''ஆமாம்... நம் பெற்றோர் காலத்தில் நாட்கள் எப்படி இருந்தன... 'டிவி'யில, 'ஒளியும், ஒலியும்' பார்ப்பதற்காக, வெள்ளிக் கிழமை இரவுக்காக ஏங்கிட்டு இருந்தாங்க. இப்போ... நூறு, 'டிவி' சேனல்கள், எப்.எம்,கள்... என்ன பாட்டு வேணும்ன்னு கேட்டு போடுறாங்க.
''அவங்க காலத்துல பாத்திரம் எடுத்துட்டுப் போய், பால், எண்ணெய் வாங்கினாங்க. இன்னிக்கு எல்லாமே கவர்ல வந்திடுச்சு. ரிடையர்மென்ட் பணத்துல தான் நம்ம அப்பாக்கள் வீடு வாங்கினாங்க. இப்ப, வேலையில சேர்ந்ததுமே பாங்க் ஆட்களும், ரியல் எஸ்டேட் ஆட்களும் வீடு தேடி வந்துடுறாங்க...

♥''முன்பு, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட்ன்னு மக்கள் கூடுற இடங்கள்ல விளம்பரங்கள ஒட்டுவாங்க. இப்போ, ஆர்கானிக் அரிசி, மரச்செக்கு எண்ணெய் வேணுமா.. மாடித்தோட்டம் போடணுமா... டாக்ஸி தேவையான்னு நம்ம மொபைல் போனுக்கு சர்வீஸ் மெசேஜ் வருது... தனிமனிதனைத் தேடி தகவல்கள் வர்ற காலக்கட்டம் இது...
''அதனால, நீயும் தனிமனிதனா உன்னை விளம்பரப்படுத்திக்கோ... வெப்சைட் ஒண்ணை வசீகரமா தயார் செய்து, கூகுள், பிளிப்கார்ட் மாதிரி நிறுவனங்களோட இடத்துல, உன்னை விளம்பரப்படுத்து. உன்னை மாதிரியே திறமை உள்ள நண்பர்களுடன் சேர்ந்து, 'வாட்ஸ் - அப்' குரூப் ஆரம்பிச்சு, தகவல்களை பரிமாறிக்கோ... மறுபடி மறுபடி உன்னை பாக்கும் போது, மனசுல நீ பதிஞ்சு போய், உன்னிப்பா கவனிப்பாங்க... மனிதர்களின் முக்கியமான வரம், நினைவு; அதை சரியான வகையில பயன்படுத்திக்கோ,'' என்றாள்.

♥வியப்புடன் அவளையே பார்த்தான்.
''இது என்ன என்று, கேட்ட காலம் அது... இதை வைத்து, நீ என்ன செய்ய முடியும் என்று கேட்கிற காலம் இது.. உலகத்தின் மிகப் பெரியவற்றை நாம் உருவாக்க வேணாம்; உலகின் மிகச் சிறந்தவற்றை உருவாக்கலாம். உன்னால் முடியும்,'' என்று மென்மையாக சொன்ன தோழியை, நெகிழ்ச்சியுடன் பார்த்து சொன்னான்...
''உண்மை தான்; எனக்குத் தேவைபடுறத நான் பெறலைன்னா, என் செயல்பாடு போதுமானதா இல்லங்கிறத புரிய வெச்சுட்டே... நன்றி பரிமளா...
நிச்சயம் சரியா செய்றேன்,'' என்றான், நம்பிக்கையுடன்!

வி.உஷா

Post a Comment

0 Comments