♥அடுத்த தலைமுறைக்கு...
♥நமக்குப் பின்
நம் வாரிசுக்கென
எதையெல்லாமோ
சேர்த்து வைக்கிற
நம் வாழ்வில்...
♥வாரிசுகளுக்கு
எதையெல்லாம் அவர்கள்
எடுத்துச் செல்ல வேண்டுமென
சொல்லிக் கொடுக்கிறோமா...
♥அதையும் இதையும்
செய்யாதே என
எதிர் மறையாய்
சொல்வதை விட்டு
அன்பாய் இரு
அடுத்தவரிடம்
மனம் விட்டுப் பேசி
மகிழ்ந்து
இதயம் விரி...
என விவரித்து
சொல்லியிருக்கிறோமா...
♥தாத்தா - பாட்டி
என நம் முன்
தலைமுறையினருக்கு
வணக்கம் சொல்லி
அவர்களை
மரியாதை செய்திட
மனதில் பதித்திருப்போமா...
♥அங்கே போகாதே
இங்கே போகாதே என
விரட்டும் நாம்
கோவிலுக்கு போ
நல்ல நண்பர்களுடன்
விளையாடு...
அதிகாலை கண் விழித்து
ஆதவனின் ஆதிக்கத்தை
காண் என
அருமையான செய்திகளை
அவர்களிடம் கடத்திச்
சென்றிருப்போமா...
♥அந்த நற்செயல்களை
அவர்களின் சந்ததிக்கு
எடுத்துச் செல்லும் கடமையை
அவர்களுக்கு புகட்டியிருப்போமா...
♥இயற்கை செல்வங்களை
இனிய வயல்வெளி
விவசாயத்தை...
இங்கேயுள்ள கனிம வளங்களை
சுகாதரத்தையும்
துாய்மையையும்
மழை நீரையும்
காடுகளையும் அதன்
உயிரினங்களையும்!
♥நாம் உணர்ந்து
வாழ்ந்தது போக அவர்கள்
தங்கள் தலைமுறைக்கு
கடத்திச் சென்றிட
மனிதப் பிறவியின்
பெருமையை
மாண்பு படுத்தி எடுத்தியம்பி
மகிழ்ந்திடுவோமா!
ரஜகை நிலவன்,
மும்பை.
0 Comments
Thank you