ஒரு ஆள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்கிறான் .
சாலை மிகவும் பெரிதாக , மிகவும் அகலமானதாக இருக்கிறது .
ஒரு சிறிய பாறை ஒன்று சாலையின் ஓரத்தில் இருக்கிறது .
அப்போது சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும் அந்த ஆள்
தான் எப்படியாகிலும் அந்தப் பாறையில் மோதாமல் போக வேண்டுமென்று பயம் கொள்கிறான் .
ஆனால் கண்ணை மூடிக் கொண்டு சென்றாலும் கூட அந்த பாறையில் மோதி விடுவது என்பது எளிதான காரியம் அல்ல .
ஏனென்றால் அந்தச் சாலையானது அந்த அளவுக்கு அகலமானது .
அவனுடைய சிந்தனையில் அந்தப் பாறையில் மோதாமல் செல்வது எப்படி என்கிற ஒரே ஒரு எண்ணம்தான் உள்ளது .
அவ்வளவு பெரிய சாலையில் எப்படி வேண்டுமானாலும் சென்றுவிட முடியும் .
ஆனால் நாம் எங்கே அந்தப் பாறையில் மோதிவிடுவோமோ என்று நினைத்து அவன் பயப்படுகிறான் .
இந்தப் பயத்தின் காரணமாக அந்தப் பெரிய சாலை அவனுக்கு மறைந்து போகிறது .
அவனால் அந்தப் பாறையை மட்டும்தான் பார்க்க முடிகிறது .
இப்போது அவனது சைக்கிளின் சக்கரங்கள் பாறை நோக்கிச் செல்லுகின்றன .
அவனது சிந்தனை முழுதும் அந்தப் பாறையைத்தான் எண்ணுகிறது .
அவன் ஏதோ வசியப்படுத்தப்பட்ட , ஹிப்னாடிசம் செய்யப்பட்டவனைப் போல் அந்தப் பாறையையே நோக்கிச் செல்கிறான் .
சென்று அந்தப் பாறையில் மோதிவிடுகிறான் .
புதிதாக சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்பவன் எதன்மீது மோதக் கூடாது என்று எண்ணுகிறானோ அதன் மீதுதான் மோதுகிறான் . 😜😝
விளக்குக் கம்பத்தில் மோதுகிறான் , பாறையில் மோதுகிறான் .
அந்தச் சாலை மிகவும் பெரியதாகவும் , அகலமானதாகவும் இருந்தது .
அப்படியிருக்கும்போது இந்த மனிதன் எப்படி அந்தப் பாறையில் மோதி விபத்துக்குள்ளாகலாம் ?
கூயே ( Coue ) என்னும் மன இயல் வல்லுநர் மனிதனின் சராசரி மனம் ' ' எதிர் விளைவு விதி ' ' ( Law of reverse effect ) என்னும் விதியால் ஆளப்படுகிறது என்று கூறுகிறார் .
எதிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறோமோ அந்தப் பொருளின் மீதே நாம் மோதிவிடுகிறோம் .
ஏனென்றால் நாம் பயப்படுகின்ற அந்தப் பொருள் நமது சுய அறிவின் மையமாக ஆகிவிடுகிறது .
இதைப்போன்றுதான் மனிதனும் கடந்த ஐயாயிரம் ஆண்டுகளாகத் தன்னைக் காமத்திலிருந்து காப்பாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறான் .
அதன் விளைவு என்னவெனில் எங்கு பார்த்தாலும் , மூலை முடுக்குகளில் எல்லாம் காமத்தினுடைய பல்வேறு உருவங்கள் அவனுக்கு எதிர்படுகின்றன .
' ' எதிர் விளைவு விதி ' ' மனிதனின் ஆன்மாவைப் பிடித்துக் கொண்டுவிட்டது .
மனதில் எந்த விஷயத்தை நீங்கள் தவிர்க்க வேண்டும் , விலக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த விஷயத்தில் தான் மனமானது அதிக அளவில் கவர்ந்திழுக்கப்படுவதையும் , வசியப்படுத்தப்படுவதையும் நீங்கள் ஒருபோதும் கவனித்ததில்லையா ?
மனிதனை காமத்திற்கு எதிராக இருக்கும்படி கற்றுக்கொடுத்த மக்கள்தான் , அதே மனிதன் காமத்தைப் பற்றியே எப்போதும் எண்ணிக் கொண்டிருப்பதற்கு பொறுப்பாளிகள் ஆகின்றனர் .
மனிதனிடம் காணப்படும் இந்த அதிதீவிர காமவேட்கைக்கு நாம் வழியதவறிய போதனைகளைத்தான் குற்றம் சொல்லவேண்டும் .
இன்று நாம் செக்ஸைப் பற்றி பேசுவதற்குக் கூட பயப்படுகிறோம் .
நாம் ஏன் அந்த விஷயத்தைக் கண்டு பயப்படவேண்டும் ?
அதற்கு காரணம் செக்ஸைப் பற்றி பேசுவதாலேயே மனிதன் காமுகன் ஆகிவிடுவான் என்று நாம் ஏற்கனவே எண்ணிக்கொண்டிருப்பதுதான் .
இந்த நோக்கம் முற்றிலும் தவறானது . காமத்திற்கும் , காமப்பித்து பிடித்து அலைவதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது .
நாம் செக்ஸைப் பற்றி பகுத்தறிவுடனும் , ஆரோக்கியமான வழியிலும் பேசுகின்ற தைரியத்தை எப்போது அபிவிருத்தி செய்துகொள்கிறோமோ அப்போதுதான் நமது சமுதாயம் இந்த செக்ஸ் என்னும் பேயிடமிருந்து விடுதலை பெற முடியும்
0 Comments
Thank you