**அழகு**
*எது*
*??????????????????*
என் மனம் நீண்ட நாட்களாக *விடை தேடிய ஒரு கேள்வி*
*அனுபவம் கூறிய. விடை*
*அழகானவர்களை நாம் அனைவரும் ரசிக்கிறோம்*
*அழகாக இருக்க* நாம் ஆசைப்படுகிறோம்;
அழகாக இல்லையெனும் *ஒற்றைக் காரணத்துக்காக பலரை ஒதுக்குகிறோம்*;
அழகு என்று நம்மை *பிறர் ஏற்காவிடில், மனம் வாடிவிடுகிறோம்*.
எது அழகு ?
சிவந்த நிறமா?
கூறான மூக்கா?
வேல்போன்ற விழிகளா?
வனப்பான உடல் அமைப்பா?
வண்ண,வண்ண உடைகளா?
வித விதமான சிகை அலங்காரங்களா?
விலை உயர்வான நகை அலங்காரங்களா?
இவைகளெல்லாம் அழகுதான்.
*ஆனால், இவைகள் மட்டுமே அழகல்ல*
குழந்தைகளை அன்போடும், பண்போடும் அரவணைத்து வளர்க்கும் பெற்றோர்கள் அழகு.
அப்பெற்றோர்களை *வயதான காலத்தில் பேணிக்காக்கும் பிள்ளைகள்* அழகு.
மனைவியை மட்டம் தட்டாத கணவன் அழகு.
கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி அழகு.
பெண்களை கண்ணியமாக நடத்தும் ஆண்கள் அழகு.
*நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையுடன்* கண்ணியம் காக்கும் பெண்கள் அழகு.
செய்யும் தொழிலை திறமையுடன் செய்பவர்கள் அழகு.
தொழிலில் *அறத்தையும், நேர்மையையும் இரு கண்களாகப்* போற்றுபவர்கள் அழகு.
*கையூட்டு வாங்காத கைகளுக்குச்* சொந்தக்ககார்ர்கள் அழகு.
பிறர் மனம் புண்படாமல் பேசும் அதரங்கள் அழகு.
*பிறரை ஊக்கப்படுத்தும் சொற்களுக்குச் சொந்தக்கார்ர்கள் அழகு.*
சாலைகளில் விபத்து நேராவண்ணம் பொறுப்புடன் வண்டி ஓட்டுபவர்கள் அழகு.
*பிறர் துன்பம் கண்டால் கலங்கும் கண்கள் அழகு.*
அத்துன்பத்தைக் *களைந்திட விரையும் கரங்கள் அழகு.*
சமுதாய மேம்பாட்டிற்கு *உழைக்கும் மனிதர்கள் யாவரும் அழகு.*
பணிவாக இருக்கும் பண்பாளர்கள் யாவரும் அழகு.
*மலர்ந்த முகமும், இனிய சொல்லும் கொண்ட மாந்தர்கள்* எப்போதும் அழகு.
இதன்படி வாழும் மாந்தர்களா நீங்கள் ? உணர்ந்து கொள்ளுங்கள்.
*நீங்கள்தான் உண்மையிலேயே அழகு.*
0 Comments
Thank you