♥கன்னி மனது !
♥ மடிப்பு மாறாத
மங்களப் பட்டுடுத்தி,
மணம் மாறாத
மல்லிகை சூடி,
மனம் நிறைய
கனவுகளுடனே,
முழு நிலவாய்
புன்னகைத்து நின்றேன்!
♥போய் சொல்கிறோமென
போனவனையெல்லாம்
பேய் காற்று கொண்டு
போனதோ...
போன இடம் தெரியாமல்
போய் தொலைந்தார்களே!
♥ஒப்பனைக்குப் பின்,
ஒப்பனையில்லா
ஓர் மனது,
ஒப்பாரி வைத்து அழுகிறதே!
♥ஒருவனுக்கும் பணம் தெரிந்தளவு
மனம் தெரியவில்லையே!
♥இன்னும் எத்தனை பேர்
பெண் பார்க்க வருவர்...
அலங்கரித்தே நான்
அலுத்துப் போக!
♥கள்ளமில்லா பருவத்திலே,
கள்ளிப் பால் கொடுத்துக்
கொன்றிருக்கலாம்...
நாசியிலே நெல் போட்டு
நாசூக்காய் முடித்திருக்கலாம்...
இப்படி
நித்தம் கொல்வதற்கு!
♥ஒப்பனைக்குப் பின்,
ஒப்பனையில்லா
ஓர் மனது
ஒப்பாரி வைத்து அழுகிறதே!
♥நிபுணா, மதுரை.
0 Comments
Thank you