♥ஒரு பெண்ணின் கற்பு என்பது எங்கு உள்ளது..???
♥ கற்பு என்பது ஆ ண் பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பது சிலரது கருத்து. வேறு சிலரோ பெண்கள் மட்டுமே கற்போடு இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர்.
சில பெண்களோ ஏன் அவர்கள் மட்டும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா என்கின்றனர்
♥இந்திய இலங்கை மலேசிய சிங்கப்பூர் பண்பாட்டில் கற்பு என்பது மிகவும் உயர்வான ஒருவிஷயமாகப் போற்றப்படுகிறது. கற்புடைய பெண்கள் கடவுளுக்கு சமானம் என்கிறர்கள். சிலர் கற்பு மன ரீதியானது என்கிறார்கள்.
♥உண்மையில் கற்பு என்பது என்ன….ஒரு பெண்ணின் கற்பு எங்கு உள்ளது என்பதை பார்க்கலாம்..
♥ஒரு பெண்ணின் கற்பு அவளின் உடலில் உள்ளது என்று எடுத்துக் கொண்டால் கைகொடுத்து பாராட்டும் பெண்கள் எல்லாம் கற்பை இழந்தவர்களா?
♥இல்லை.. கற்பு என்பது அவளின் கழுத்துக்கு கீழ் என்றால் மருத்தவர் பரிசோதனைக்கு பின் அனைத்து பெண்களும் கற்பிழந்தவர்கள் என்று தானே அர்த்தம்.
♥சரி….அவளின் பிறப்புறுப்பு என்றால் பெண் மருத்துவர்களோடு சேர்ந்து ஆண் மருத்துவர்களும் பணியாற்றுகிறார்களே… அப்படியென்றால் ஒவ்வொரு குழந்தை பிறத்தலிலும் பெண் கற்பை இழந்தவர்கள் ஆகிவிடுவார்களே..!
♥அவள் உடலில் உள்ள கவர்ச்சி பகுதிகள் என்றால் பேருந்தில் ஏறி இறங்கும் போது இடிபாட்டில் சிக்கிய அணைவரும் கற்ப்பை இழந்தவர்கள் தான்…..!
♥நிர்வாணம் தான் என்றால் இறந்த பின் போஸ்மார்டம் செயய்யுமிடத்தில் கற்பை இழந்து தான் உலகை விட்டு செல்கிறார்கள்…..!
♥கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல உணர்வுகள் சம்பந்தப்பட்டதே…..! காதலிக்கும் முன் அல்லது திருமணத்திற்கு முன் இவள் கற்போடு இருப்பாளா என்ற சந்தேகம் வேண்டாம்…..!
♥அவள் உன் மேல் உண்மையான அன்பு வைத்திருப்பாளா..??? என்று மட்டும் சிந்தியுங்கள்…..! ஆம் அவளின் மனமே கற்பு.
♥ நல்ல உணவு என்பதே அதை நாம் நல்ல உணவு என்று நினைத்து நம்பிக்கையோடு உண்பதே….. அதே போல் கற்புடையவள் என்பதும் நாம் அவள் நல்லவள் என்று நம்புவதிலேயே உள்ளது.
♥ஒரு பெண் நினைத்தாள் தன் மனதால் தன் கற்பை இழக்கமுடியும். ஆனால் எந்த ஆனும் அவளின் மனதை ஜெயிக்காமல் அவளின் கற்பை நெருங்கமுடியாது...
♥ஆயிரம் முறை கற்பழிக்கப்பட்டவள் கூட கற்புக்கரசிதான்... ஏனெனில் அது அவளின் மனதின் ஒப்புதல் இன்றி நடந்த பலாத்காரம்.
♥அதே நேரம் நிமிர்ந்துகூட பாக்காத அடுத்த ஆண்கூட பேசாத பெண் கற்புக்கரசி என்று அர்த்தம் இல்லை.. அவள் மனதால் ஒருவனுடன் ஒரு நிமிடம் வாழ்ந்திருந்தால் கூட கற்பிழந்தவள்தான்.....
♥ஒரு பெண்ணின் கற்பு என்பது அவளின் மனமே தவிர உடல் இல்லை.
0 Comments
Thank you