♥தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!
♥வரி ஏய்ப்பு செய்வதற்கு
வணிக வரலாறு
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
♥குனிந்து கும்பிட்டு
காரியம் சாதிக்க
கூர்மாசனம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
♥பாலில் கலப்படம் செய்ய
பயோ கெமிஸ்ட்ரி
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
♥போதைப் பொருட்கள் விற்க
பொது வணிகம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
♥தொலைக்காட்சி தொடரில் நடிக்க
தொல்காப்பியம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
♥அரசியல்வாதியாகி
நாட்டை ஆள்வதற்கு
அரிச்சுவடி தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
♥கள்ள நோட்டு அச்சடிக்க
கணிதம் தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
♥சிலைகள் கடத்துவதற்கு
சிற்பக்கலை தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
♥ஊழல் செய்வதற்கு
உலகப் பொருளாதாரம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
♥போலி சாமியாராக
போதனைகள்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
♥மணல் கொள்ளை அடிப்பதற்கு
மண்ணின் வளம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
♥குதிரை பேரம் செய்வதற்கு
குதிரை ஏற்றம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
♥ஆம்... மண்ணில்
இத்தொழில்கள் செய்வதற்கு
எதுவுமே தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை...
மனசாட்சியை மட்டும்
அடகு வைக்கத் தெரிந்திருந்தால்
போதும்!
♥பெ.கருணை வள்ளல்,
சென்னை.
0 Comments
Thank you