♥#அதுஎன்ன_லயன்_சாமி...
♥பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகள், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டு, காணும் பொருட்களின் பெயர்களை எல்லாம் ஆங்கிலத்தில் சொல்லி, அதை, குழந்தையை திரும்பச் சொல்லச் சொல்வர். இது ஒரு புறம் இருக்க, தற்போது, கோவிலில் இருக்கும் சாமி பெயர்களைக் கூட, நேரிடையாக மொழி பெயர்த்து, அதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் கொடுமையும் நடக்கிறது.
♥மதுரைக்கு அருகே உள்ள புகழ் பெற்ற நரசிம்மர் கோவிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். ஒரு பெண், தன் இரண்டு வயது குழந்தைக்கு, கருவறையில் உள்ள நரசிம்மரை காட்டி, 'அதோ பார் லயன் (சிங்கம்) சாமி... எங்கே சொல்லு... லயன் சாமி...' என கற்றுக் கொடுக்க, அக்குழந்தையும், 'லயன் சாமி... லயன் சாமி...' என்று கத்தியது.
♥கடவுள் பெயரை ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்க விரும்பினால், 'காட் நரசிம்மர்' என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம்; அதை விடுத்து, அதென்ன லயன் சாமி...
இனி, விநாயகரை, 'எலிபென்ட்' சாமி என்றும், ஆஞ்சநேயரை, 'மங்கி'சாமி; சக்கரத்தாழ்வாரை, 'வீல்' சாமி; சிவனை, 'புல்லக்' சாமி மற்றும் முருகனை, 'பீகாக்' சாமி என்று, தெய்வங்களின் உருவ அமைப்பை வைத்து, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூறுவார்களோ...
♥பெற்றோரே... தெய்வங்களின் அழகான பெயர்களை, அதன் உயிர்ப்புத் தன்மையுடன் கற்றுக் கொடுங்கள்; அப்போது தான் அவர்கள் மனதில் பக்தி வளரும்; மாறாக, இப்படி தமிங்கிலீசில் கற்றுக் கொடுத்தால், தவறான எண்ணம் தான் வளரும்! யோசியுங்கள்!
— வைகைத்தென்றல், மதுரை
0 Comments
Thank you