கல்யாணமான புதுசுன்றதால
மறுவீடெல்லாம் முடிஞ்சி
போனவாரத்துல மனைவியோட சொந்தவூருக்குப்போயி ஒருநாள்தங்கியிருந்தேன்.
என்னதான்
மனைவி, மச்சான்னு நிறையவுறவுகளிருந்தாலும்
அடிக்கடி என்னவேணும்னு கேட்டுக்கேட்டு நம்மளை பார்த்துக்கிட்டாலும்,
ஏதோவொன்னு மனசுல குறையாவேயிருந்துச்சி.
ஏதோவொன்னுனா....
அதை எப்படிச்சொல்றது..!
உடனே எங்கவீட்டுக்குவந்துடணும்னு தோனுச்சி.
கடைசில, எங்கவீட்டுக்கும் மனைவியோட பிறந்தவீட்டுக்கும் ரொம்பதூரம்லாம் இல்ல.
பைக்லவந்தா 20நிமிஷந்தான்.
ஆனாலும் ஏதோ சொந்தவூர்லேருந்து ஏழுகடல் ஏழுமலையைத்தாண்டிவந்தமாதிரி மனசு.
புது உறவுகள்மேல உடனடியா ஒட்டுதல்வந்துடுமா என்ன..?
அந்த புது உறவுகள் காட்டுற அன்புக்கு மேலாக
ஏதோவொரு வெறுமை மனசுல இருந்துச்சி.
பெண்கள்னா
பொறுமையானவங்க, பொறுப்பானவங்க, அப்படி, இப்படி,
பிரசவவலியைத்தாங்குறாங்கனு அவங்களை சொல்றோம்.
எனக்கென்னவோ,
பிரசவவலியையெல்லாம்விட வலிதர்றது
பிறந்ததுலேருந்து ஓடியாடிவிளையாடின ஊரை பிரிஞ்சிவர்றதுதான்னுதோனுது.
ஊர்னா சும்மா
ஊர்னு பொருளில்ல.
வீட்டுமக்கள்லேருந்து,
தெருமக்கள்லேருந்து,
தெருமுனைப்பிள்ளையார்லேருந்து,
மூனாவதுவீட்டு முருங்கைமரத்துலேருந்து,
கொல்லையிலிருக்குற நாரத்தமரத்துலேருந்து,
தினமும் சோறுபோட்டுத்தின்ற பழையதட்டுலேருந்து,
டம்ளர்லேருந்து,
தனக்குப்பிடித்தமான பூனக்குட்டி நாய்க்குட்டிலேருந்து
இப்படி எல்லாத்தையும் விட்டுட்டுவரணும்.
இதைவிடவா பிரசவவலி பெருசாயிருந்துடப்போகுதுன்னு எனக்கு தோனுது.
நாம என்னதான் மனைவியை அவங்க பிறந்தவூட்லயிருந்ததைவிட நல்லபடியாப்பார்த்துக்கணும்னு பார்த்துக்கிட்டாலும்
சிலவிஷயங்களை அவங்களுக்கு உருவாக்கித்தரவேமுடியாதுனு தோனுது.
"தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டுயெடந்தானே..."னு வைரமுத்து சொல்லிட்டாலும்
அப்படிவாழுறதெல்லாம் ரொம்பலேசுப்பட்டவிஷயமாதிரித்தெரியல.
A Wife Fulfills Her Husband's Life By Losing Many Things In Her Life.
வேற எப்படிச்சொல்றதுனுதெரியல.
#வாழ்க்கையதிகாரம்
- பாலமுருகன் மோ
0 Comments
Thank you