மனம் தளராமல் மறுபடியும் எழுந்து நில்.
தோல்விகளை சந்தித்ததால் நீ வாழ்வில் தோல்வி அடைந்து விட்டாய் என்று அர்த்தம் இல்லை. இறுதியில் நீயும் தான் ஜெயிக்கப் போகிறாய்.
தோற்றுப் போய் விட்டோமே என்று மனம் குறுகிய நிலைக்கு செல்லாதே வாழ்க்கையில் வெற்றி தோல்விகள் வந்து போவது இயல்பு.
எக்காரணம் கொண்டும் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியில் இருந்தும் விலக நினைக்காதே.
உன்னுடைய எல்லா முயற்சியிலும் நான் இருப்பேன்.
தற்போதைய நிலை இதற்கு முன்பு இருந்த நிலை அனுபவித்து வந்த வாழ்க்கையை எப்போதும் எந்த சூழ்நிலையிலும் மறவாதே.
முடிந்ததை தேடிச் சென்று உதவிடு. பசியில் இருப்பவனை கண்டால் உடனடியாக உதவிடு.
யாரையும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ள நினைக்காதே. தான் என்ற கர்வத்தை விட்டு விடு.
கலங்காதே. அனைத்திலும் வெற்றி பெறப் போகிறாய் காத்திரு நான் இருக்கிறேன்.
வாழ்க்கையில் சில நிகழ்வுகள் மனதை ரணப் படுத்தும். சில நிகழ்வுகள் மனதிற்கு வருட லான சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கும்.
எந்த சூழ்நிலையில் உன் அருகிலேயே நான் உனக்காக இருப்பேன், உனக்கான நல்லதை மட்டும் தான் செய்வேன். உனக்கும் உன் குடும்பதினருக்கும் எல்லாம் வந்து சேரும்.
உனக்கான காலம், விடியல் வந்துவிட்டது. எல்லாம் நல்லதாய் நடக்கும். உன் வாழ்க்கை நல்ல படியாக அமையும் எதற்கும் கவலை படாதே. உனக்கு உலகமாக இருப்பேன்
நல்ல நிலையில் நிம்மதியுடன் சந்தோஷமான மனநிறைவுடன் உன்னையும் உன் குடும்பத் தையும். நான் வாழ வைப்பேன்
பயப்படாதே எதற்கும் எல்லாம் உன் தந்தையான நான் அறிவேன்.
உனக்கு எல்லா சூழ்நிலைகளிலும் நான் துணை நிற்பேன்.
என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து செயல்படு...மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்...
நல்லதே நடக்கும்..!
என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ !
0 Comments
Thank you