காலங்காலமாக அழுகை என்ற உணர்வு பெண்களோடு மட்டுமே பொருத்திப் பார்க்கப்படுகிறது. ஓர் ஆண் அழுதால், "என்னடா! பொம்பள மாதிரி அழுவுற..." என்று சுற்றியிருப்பவர்களால் கடிந்துகொள்ளப்படுவார். அழுகை என்பது பெண்களுக்கு மட்டும்தானா, ஆண்கள் அழுவது தவறா?
தோல்வியைக் கண்டு துவளக்கூடாது என்று சொல்வது எளிது. ஆனால், தோல்வியை அனுபவிக்கும்போதுதான் அதன் வலியை நாம் உணர முடியும். அதேபோல்தான் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்குவதில் ஏற்பட்ட தோல்வியைத் தாங்க முடியாமல் கண்ணீர்விட்டார் இஸ்ரோ தலைவர் சிவன். பிரதமர் நரேந்திர மோடியின் தோள்களில் அவர் சாய்ந்து அழுத காட்சி அடுத்த நாள் பேசுபொருளானது. சில நொடிகள்தான் அவர் கண்ணீர் சிந்தினார் என்றாலும் அதன்பிறகு, பல நாள்களுக்கு அந்தச் செயல் விமர்சனத்துக்குள்ளானது. அதிலும் சிலர், 'உயர் பதவியில் இருக்கும் ஓர் ஆண் இப்படிப் பொதுவெளியில் அழலாமா?' என்று விமர்சித்தனர்.
காலங்காலமாக அழுகை என்ற உணர்வு பெண்களோடு மட்டுமே பொருத்திப் பார்க்கப்படுகிறது. ஓர் ஆண் அழுதால், "என்னடா! பொம்பள மாதிரி அழுவுற..." என்று சுற்றியிருப்பவர்களால் கடிந்துகொள்ளப்படுவார். அழுகை என்பது பெண்களுக்கு மட்டும்தானா, ஆண்கள் அழுவது தவறா?
"இன்றைய சமூகம் ஆண்கள் அழுதால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், பெண்கள் அழுதால் ஏற்றுக்கொள்கிறது. அழுகை என்பது மனிதனுக்கு உரிய குணங்களில் ஒன்று. இதில் ஆண் பெண் என்று பிரித்துப் பார்க்கக் கூடாது.
சில சமயங்களில் உணர்ச்சிகள் மேலோங்கும்போது அழுகை வருவது இயற்கைதான். அழுகையும் ஓர் அழகே. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அழுகையும் ஆபத்தானதுதான். நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி அழுகையையும் கட்டுக்குள் வைக்கத் தெரியவேண்டும்.
ஆண் என்பவன் எப்போதும் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்து உறுதியாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அவன் ஒரு சிறந்த குடும்பத் தலைவனாக இருந்து முழு பொறுப்பையும் ஏற்க முடியும் என்று சமூகம் கருதுகிறது. அதனால்தான் பெரிய பதவியில் இருப்பவர் அழும்போது அது விமர்சிக்கப்படுகிறது.
இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ஆறுதல் கூறி மோடி அவரை அரவணைத்தபோது ஒரு தந்தையின் அரவணைப்பில் இருந்த குழந்தைபோல் அழுதார். நாம் ஒரு கஷ்டத்தில் இருக்கும்போது ஒருவரின் அரவணைப்பு, கண்டிப்பாக அழுகையைத் தூண்டக்கூடியதே. இது ஒரு வித்தியாசமான அழகான மனித இயல்பு.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு வந்துவிட வேண்டும். உணர்ச்சிகளை எவ்வளவு விரைவாகக் கட்டுப்படுத்தி மீண்டுவருகிறார்கள் என்பதுதான் முக்கியம். அழுகை தூண்டப்படும்போது இதயம் வேகமாகத் துடிக்கும். மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறையும். இதனால் மூளை கிளர்ச்சியடைந்து பின்னர் அழுகை வரும். இவை அனைத்தும் மூளையில் உள்ள அமைகிடலா என்ற பகுதியில் நடைபெறுகிறது.
அழுகை நமக்கு புத்துணர்வு அளிக்கும். மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைப்பதுபோல் நம்மை இலகுவாக்கிவிடும் அழுகை. அழுதபிறகு நம் மனது தேறிவிடும். அழுகையும் ஒரு மருந்துதான். பரிணாம வளர்ச்சியில் நம் மூளை பயம், கோபம், துக்கம் எனப் பல உணர்வுகளைக் கட்டமைத்துள்ளது. சிந்திக்கத் தெரிந்த மனிதனாக வளர்ந்துள்ள நமக்கு அழுகையும் சிரிப்பும் அளவோடு தேவையான ஒன்றுதான்" .
சிறு வயதிலேயே ஆண் குழந்தைகளை அழுகை விஷயத்தில் பிரத்யேகமாக அணுகக்கூடாது என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். "சிறு வயது ஆண் குழந்தைகள் அழுதால், 'ஏன்டா பெண் பிள்ளை மாதிரி அழுவுற' என்றுதான் கேட்கின்றனர். இது மிகவும் தவறானது. இதுவே பிஞ்சுகளின் மனதில் விதைக்கப்பட்டு, அழுகை என்பது ஆணுக்குரிய குணம் அல்ல என்று ஒரு தவறான பிம்பம் உருவாகும்"
0 Comments
Thank you